குட் பேட் அக்லி ரசிகர்களுக்கான படம்லாம் கிடையாது!.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் புதுசா உருட்டுறாரே!..

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் நேற்று வெளியானதிலிருந்து சமூக வலைதளத்தில் அதை பற்றியான பேச்சுகளே அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. அஜித் குமாரின் ரசிகர்கள் படத்தை கொண்டாடிவரும் நிலையில் தற்போது படத்தை பார்த்த பிக் பாஸ் முத்து குமரன் தனது கருத்தை கூறியுள்ளார்.
முத்து குமரன் தனது யூடியூப் சேனலில் சமூகத்தின் கலாச்சார கருத்துகளை அவரது பாணியில் பேசி பலரையும் சிந்திக்க வைத்துள்ளார். மேலும், பல பட்டிமன்றங்களில் பேச்சாளராக போட்டியாளராக ஈடுபட்டுள்ளார். முத்துகுமரனின் பேச்சுத் திறைமைக்கே பலரும் அவருடைய ரசிகர்களாக மாறிவிட்டனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரபான மக்கள் செல்வன் முதல் முறையாக தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சிசன் 8ல் முத்துகுமரன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தனது திறமைமிக்க பேச்சாலும், அன்பு மிகுந்த குணத்தாலும் மக்களின் மனதை கவர்ந்த முத்துகுமரன் பிக் பாஸ் சீசன் 8ன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், முத்துகுமரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ராயல் என்ஃபில்ட் பைக்கை தனது தந்தைக்கு சர்ப்ரைசாக கொடுத்து மகிழ்ந்தார். அதை தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் சில விஷயங்களை பற்றி தனது கருத்துகளை தைரியமாக முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பார்த்த முத்துகுமரன் இந்த படம் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமல்ல நிறைய பேரை ரசிகர்ளாக மாற்ற எடுக்கப்பட்ட படம் எனக் கூறியுள்ளார். பிக் பாஸை தொடர்ந்து முத்துகுமரன் என்ன செய்ய போகிறார் என பலரின் மனதிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
அஜித் குமாருக்கு ஃபேன் பாய் சம்பவத்தை ஆதிக் ரவிச்சந்திரன் செய்துவிட்டார் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கூறினாலும், மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றும் 4 நாட்கள் கூட ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடுமா தெரியவில்லை என்கின்றனர்.