லியோ திரைப்படத்தில் இணையும் பிக் பாஸ் பிரபலம்… ஆனால் ஜனனி இல்ல.. அப்படின்னா யாரா இருக்கும்??
விஜய்யின் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ, கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என பலரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் விஜய்யை வைத்து “மாஸ்டர்” என்று ஒரு ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து “விக்ரம்” என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆதலால் விஜய் ரசிகர்கள் “லியோ” படத்திற்காக வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட ஜனனி, “லியோ” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது “லியோ” திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்ட அபிராமி வெங்கடாச்சலம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ஜனனி இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அபிராமி இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவருவது ரசிகர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பெண்களை போற்றும் திரைப்படம்…. இசையமைக்க மாட்டேன் என அடம்பிடித்த இளையராஜா… அடக்கொடுமையே!