பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அபிஷேக்!
பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே அபிஷேக் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் போட்டியாளர்களிடம் ஓவர் வாய் பேசி ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக என்னவெல்லாமோ செய்து வந்தார்.
அவ்வளவு ஏன் கமல் ஹாசனையே “சிஎம் ஆகவேண்டும் என்பதற்காக 100 நாளில் ஆண்டவர் பண்ற வேலை இருக்கே” என அவர் பேசி கலாய்த்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. தொடர்ந்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் மாற்றி மாற்றி பேசி தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நயன்தாரா படம்….
இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறவேண்டும் என பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் அபிஷேக் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியாகியது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய ப்ரோமோவில் கமல் அபிஷேக்கை வெளியேற்றிவிட்டார். இது ஆடியன்ஸ் பலருக்கும் குளுகுளுவென மகிழ்ச்சியை தந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=Tyyj-2UVGhI