நீ வெளிய வந்தா ஆளுங்க காறித்துப்புவாங்க... கேவலமானவன் அபிஷேக் - கடுப்பில் ஆடியன்ஸ்!
போட்டியாளர்களிடம் டபுள் கேம் ஆடி வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!
பிக்பாஸ் 5 கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அமைதியாக இருந்தவர்கள் எல்லாம் கொம்பு முளைத்து ஆட ஆரம்பித்துவிட்டனர். நேற்று பவானி பத்தரகாளி வேஷத்தை பார்த்து பலரும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற அளவுக்கு வாயடைத்துவிட்டனர்.
கேம் ஸ்வாரஸ்யத்தை எட்டியிருப்பதால் வீட்டில் இருப்பவர்களின் முகங்கள் வெட்டவெளிச்சத்திற்கு வந்துக்கொண்டிருக்கிறது. அதிலும் ஆரம்பதில் இருந்தே அபிஷேக் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமவில் அபிஷேக் பவானியிடன் சென்று டாப் 5ல் நீ நான் இருக்கனும் எக்காரணத்தை கொண்டு வருணை ஹாலில் விடாதே என கூறிவிட்டு அப்படியே வருணிடம் சென்று உன்னை ஹாலில் வரவிடமாட்டாங்க என கூறி டபுள் கேம் ஆடுகிறார்.
இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும் எல்லாரையும் விளையாட்டுக்குள்ள கொண்டு வருவது அபிஷேக் தான். அபிஷேக்க பிடிக்குதோ இல்லையோ ஒரு உண்மைய ஆடியன்ஸ் ஒத்துக்கிட்டே ஆகனும். அந்த ஒரு காரணத்துக்காகவே அபிஷேக் இருந்தால் தான் TRP ஏறுகிறது என்று அவரை Finals வரைக்கும் கொண்டு போய்டுவாங்க போல...