Connect with us

Cinema News

இப்போ ரஜினி vs விஜய் தான்.. அஜித்லாம் கிடையாது!.. அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக் பாஸ் பிரபலம்!..

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல், விஜய் – அஜித் என நட்சத்திர மோதல்கள் தமிழ் சினிமாவில் அப்போதிருந்து இப்போ வரைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனால், தற்போது கொஞ்சம் வித்தியாசமாக ரஜினிகாந்த் vs விஜய் மோதல் சூடுபிடித்திருக்கிறது என பிக் பாஸ் பிரபலமான அபிஷேக் ராஜா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நெத்தியடியாக பேசியுள்ளார்.

கிட்டத்தட்ட 7 மாதங்களாக விடாமுயற்சி படத்தை பற்றிய பேச்சுக்களே இல்லாத நிலையில், அஜித் எல்லாம் இப்போ போட்டியிலேயே கிடையாது என ஆணித்தரமாக சொல்லி அஜித் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளார் அபிஷேக் ராஜா.

ரஜினி vs விஜய் தான்:

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்ந்து சமூக வலைதளங்கள், மீடியாக்கள் மற்றும் யூடியூப்கள் என எங்கே திரும்பினாலும் அங்கே புதிது புதிதாக கருத்துக்களும், விவாதங்களும், சர்ச்சைகளும், ட்ரோல்களும், மீம்களும் பறக்க நடிகர் ரஜினிகாந்தின் 50 நிமிட பேச்சுக்கள் அடிபோட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஓப்பன் பண்ணா என்கிற யூடியூப் சேனலில் சினிமா படங்களை விமர்சித்து வரும் அபிஷேக் ராஜா கடந்த 5வது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றிருந்தார். தொடர்ந்து சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விமர்சனம் செய்வது என கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வரும் அபிஷேக் ராஜா ரஜினிகாந்தின் ஆடியோ லான்ச் பேச்சு அப்படி மிரட்டி உள்ளது என்றும் இந்த வயதிலும் அத்தனை எனர்ஜியுடனும் காலையில் 6 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்கும் ஒழுக்கமும் சினிமாவில் இருப்பது போன்ற மேக்கப் போட்டுக் கொண்டு ரியல் லைஃப்பில் இருக்க மாட்டேன், இதுதான் ரஜினிகாந்த் என காட்டுகிறாரே அந்த தைரியம் வேற எந்தவொரு நடிகருக்கும் வராது என்று அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.

அஜித் ஆட்டத்திலேயே இல்லை: 

ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு நடுவே இருப்பது ப்யூர் பிசினஸ் போட்டி அது இருந்துட்டு போகட்டும், அது இருக்க வேண்டும், அதை வைத்துத் தான் தமிழ் சினிமாவே வியாபார ரீதியாக வளர்கிறது என்கிற நுட்பமான பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும், இந்த போட்டியில் இப்போதைக்கு நடிகர் அஜித் சுத்தமாக கிடையாது என்றும் ஒரே போடாக போட்டு அபிஷேக் ராஜா பேசிய பேச்சை வைத்து விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top