
Cinema News
அவ எனக்கு துரோகம் செஞ்சுட்டா… இனி எந்த காரணத்துக்காகவும் அவ கூட சேர்ந்து நடிக்க மாட்டேன்…..!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற அந்த நடிகையும், நடிகரும் ஒருவருக்கொருவர் காதலில் விழுந்தனர். ஆனால் வழக்கம்போல் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் தனித்தனி பாதையில் சென்று விட்டனர்.
அந்த நடிகை சீக்கிரமே நடந்ததை மறுந்து விட்டு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். ஆனால், அந்த நடிகர் உண்மையிலேயே சின்சியராக நடிகையை காதலித்தாராம். அதனால் அவரை மறக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தான் தற்போது அதில் இருந்து மீண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகராக முன்னேறி கொண்டிருக்கிறார்.
ஆனால், என்னதான் அந்த நடிகை ஹீரோயினாக நடித்தாலும், இன்னும் அவருக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஹிட்டான காதல் ஜோடி சினிமாவில் இணைந்து நடித்தால் படம் வெற்றி பெறும் என நடிகை ஆசைப்படுகிறாராம்.
அதனால் நடிகை சில இயக்குனர்களிடம் கூறி நடிகரிடம் தூது அனுப்பி உள்ளார். ஆனால் நடிகரோ தன்னை விட்டு பிரிந்து சென்ற அந்த நடிகையுடன் மட்டும் இனி எப்போதுமே இணைந்து நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
மேலும் மற்ற யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக போடுங்கள், எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அவர் மட்டும் வேண்டவே வேண்டாம் என மிகவும் கறாராக கூறி விட்டாராம். இதனால் நடிகை வருத்தத்தில் உள்ளாராம்.