நான் செஞ்ச எல்லா தப்புக்கும் ஸாரி!.. என் மேல கல்லை எறிங்க.. ஐஷு உருக்கம்!

”பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகப்பெரிய பிளாட்ஃபாரம் என்றும் அதை நான் முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டேன் என்றும் பதிவிட்டுள்ள ஐஷு. அந்த இடம் போல டாக்ஸிக்கான ஒரு இடத்தை இது வரை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை என்றும் போட்டுத் தாக்கி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் பெரும் நம்பிக்கையுடன் என்னை அனுப்பிய பெற்றோர்கள் கனவில் மண் அள்ளிப் போட்டு விட்டேன். ரசிகர்களாகிய உங்களையும் நான் மகிழ்விக்க தவறிவிட்டேன். தேவையில்லாத சேர்க்கையுடன் சேர்ந்துக் கொண்டு, பிக் பாஸ் வீட்டுக்குள் என்னை எச்சரித்த யுகேந்திரன், விச்சு அம்மா உள்ளிட்டவர்கள் சொல் பேச்சையும் கேட்காமல் நடந்து கொண்டது என் மிகப்பெரிய முட்டாள்த்தனம் தான்.

இதையும் படிங்க: மன்சூர் அலி கான் மட்டுமில்லை!.. ரோபோ சங்கர், ராதா ரவி எல்லாமே இப்படி தான்.. சின்மயி காட்டம்!..

என் உயிரையும் விட துணிந்து விட்டேன். ஆனால், எனக்காக என் பெற்றோர்கள் இருப்பதை பார்த்து இனி அவர்களுக்காக வாழ முடிவு செய்துள்ளேன். நிகழ்ச்சியில் நான் நடந்து கொண்டது உங்களுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டுமின்றி எனக்கே என்னை பார்க்க பிடிக்கவில்லை. நான் செஞ்ச எல்லா தப்புக்கும் என்னை மன்னித்து விடுங்கள்.

என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கல்லைக் கொண்டு அடியுங்கள், ஆனால், என் குடும்பத்தை அடிக்க வேண்டாம். பிக் பாஸ் வீட்டில் நான் பேசிய கெட்ட வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இதையும் படிங்க:மானங்கெட்ட மன்சூர் அலி கான்!.. இப்படியா பேசுவ.. வச்சு விளாசிய திரிஷா.. துணைக்கு வந்த லியோ இயக்குநர்!..

அதை சுட்டிக் காட்ட சோஷியல் மீடியாவில் நீங்கள் அதை விட மோசமான கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி உள்ளீர்கள். நான் எங்கிருந்து கற்றுத் தெளிந்துக் கொள்வேன்” என தெரியவில்லை என்றும் தன்னுடைய ஹேட்டர்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார் ஐஷு. பிரதீப்புக்கும் ஸாரி சொல்லி அவர் உருக்கமாக பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related Articles

Next Story