ஷாக்கிங்!.. பிக் பாஸ் பிரபலம் வீட்டில் திடீரென நிகழ்ந்த பேரிழப்பு.. உடைந்து போன அக்‌ஷரா ரெட்டி!..

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்ற அக்‌ஷரா ரெட்டி வீட்டில் திடீரென பேரிழப்பு நடைபெற்றுள்ளது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் வருண் உடன் நெருங்கிய நட்பாக பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு கலக்கிய நடிகையும் மாடல் அழகியுமான அக்‌ஷரா ரெட்டியின் தாயார் கெளரி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 60.

இதையும் படிங்க: அந்த டெலிட் பண்ண சீனை ரிலீஸ் செய்த லியோ டீம்!.. வெற்றி விழாவுக்கு ஃபுல் மோடில் தயார் போல!..

டயாலிஸிஸ் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்த கெளரி ரெட்டியை சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்று சர்ப்ரைஸ் செய்து சந்தோஷப்படுத்தி இருந்தார் அக்‌ஷரா ரெட்டி. அந்த கேக் கட்டிங் வீடியோவை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரது பிரார்த்தனைகளை பெற்றிருந்தார்.

ஆனால், எதுவுமே கடைசி நேரத்தில் கை கொடுக்காத நிலையில், அக்‌ஷரா ரெட்டியின் தாயார் கெளரி ரெட்டி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: இந்த தடவ மிஸ் ஆகாது!.. குட்டி ஸ்டோரியுடன் தயாரான விஜய்.. லியோ வெற்றி விழாவுக்கு மனைவி வருவாங்களா?..

குக்கூ என செல்லமாக அக்‌ஷரா ரெட்டியை அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் அழைத்து வந்த நிலையில், யார் அந்த பெயரை சொல்லி அழைத்தாலும் அன்பாக பழகி வந்த அக்‌ஷரா ரெட்டி தற்போது அம்மாவின் இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுது வருகிறார்.

சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் அக்‌ஷரா ரெட்டிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது அம்மாவின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CyRDNmPxesr/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

Related Articles

Next Story