Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக வாட்டர் மெலன் ஸ்டார் குறித்த புரோமோக்கள் மட்டுமே அதிகம் இடம் பெற்று வரும் நிலையில் தற்போது அவர் குறித்த காமெடி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பெரிய அறிமுகம் இல்லாத சாதாரண பிரபலங்கள் மட்டுமே உள்ளது. பார்க்கும் ரசிகர்களுக்கு முதலில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கொடுக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இன்று வரை சண்டை மட்டுமே அதிகமாக நடந்து வருகிறது.
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக அளவில் வரம்புக்கு மீறிய வார்த்தைகள் நிகழ்ச்சிக்குள் இடம்பெறுவது பார்ப்பவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ரொம்ப சாதாரணமாக ஒருவரின் வளர்ப்பையும், வாழ்க்கை தரத்தையும் குறித்து அசால்டாக போட்டியாளர்கள் சொல்லிவிட்டு செல்கின்றனர்.
இரண்டாவது வாரம் நடந்த கேப்டன் டாஸ்க்கில் சுபிக்ஷா கம்ருதீனுக்கு எதிராக விளையாடியதால் அவர் வந்த இடம் சரியில்லை. அதனால்தான் இப்படி நடந்து கொள்வதாக அவர் கூற இது பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. இதனால் கம்ருதீன் மீது நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தது.
ஆனால் தற்போது அவர் அமைதியாக இருக்கும் நிலையில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கடந்த இரண்டு நாட்களாக சுற்றி இருக்கும் பிரபலங்களை குறித்து நீ எல்லாம் ஒரு ஆளா, உன் தகுதி என்ன? என் படிப்புக்கு முன்னாடி நீங்க எல்லாம் வர முடியுமா என மட்டம் தட்டி பேசி வருகிறார்.
இன்றைய நாளின் முதல் ப்ரோமோவில் கூட ரம்யா ஜோவிடம் அவர் தராதரம் குறித்து கேள்வி எழுப்ப சபரி வாட்டர் மெலன் உடன் சண்டைக்கு சென்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய வார டாஸ்க் குறித்து திவாகரை அழைத்து பிக் பாஸ் விளக்கிக் கொண்டிருப்பார்.
எல்லாம் முடிந்த பெண் அவரிடம் ஏதும் சந்தேகம் இருக்கா என கேட்க Hat என்றால் என்ன எனக் கேட்பார்? தற்போது இந்த வீடியோ வைரலாகி என் படிப்பு என்னனு ஓவர் பீலா விட்டேங்களே இது கூடவா தெரியலை எனக் கலாய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
முதல் நாளில் வாட்டர்மெலன் ஸ்டார் அதிருப்தியில் உள்ளே வந்தாலும் போட்டியாளர்கள் அவரை நடத்தியது கொஞ்சம் ரசிகர்கள் ஆதரவை கொடுத்தனர். ஆனால் தற்போது அவரே அதை கெடுத்து கொண்டு வருவதால் விரைவில் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…