More
Categories: latest news television

ஈரமான ரோஜோவே சீசன் 2 மூலம் பிக்பாஸ் நடிகையை களமிறக்கும் விஜய் டிவி…..

சீரியல்களுக்கு பெயர் போன சேனல் என்றாலே அது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்த வரிசையில் மக்கள் மனதில் இடம் பிடித்த சீரியல் தான் ஈரமான ரோஜோவே. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் திரவியம் ராஜ்குமார் மற்றும் பவித்ரா ஆகிய இருவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான எபிசோடுகள் ஓடிய நிலையில் சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

Advertising
Advertising

இந்த சீரியலில் நடித்து வந்த பவித்ரா தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதில் நாயகி பவித்ரா கிடையாதாம். அவருக்கு பதில் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை கேப்ரியலா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்ரியல்லா ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 7சி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதனையடுத்து பிக்பாஸ், உள்ளிட்ட ஒரு சில நிக்ழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Published by
ராம் சுதன்

Recent Posts