என்ன இப்படி ரோட்டுக்கு வந்துட்டாரு பிக் பாஸ் ஜனனி!.. லியோ படத்துல நடிச்சும் இந்த நிலைமையா?..

by Saranya M |   ( Updated:2023-09-26 09:48:39  )
என்ன இப்படி ரோட்டுக்கு வந்துட்டாரு பிக் பாஸ் ஜனனி!.. லியோ படத்துல நடிச்சும் இந்த நிலைமையா?..
X

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி பல மாதங்கள் கழித்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்றிருப்பதாக கடற்கரை ஓரத்தில் உள்ள சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3ல் இலங்கையில் இருந்து வந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவை போலவே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஜனனி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் அமுதவாணன் உடன் மிகவும் நட்பாக பழகி வந்தார்.

இதையும் படிங்க: தளபதி தரிசனத்தை விட.. லியோ பிளாக் டிக்கெட் பிசினஸ் தான் முக்கியம்!.. விஜய் ரசிகர்களா இப்படி?..

ஆனால், பிக் பாஸ் வீட்டில் விளையாட்டில் பெரிதளவில் ஜனனி கவனம் செலுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன்வைத்தனர். இறுதிவரை அந்த விளையாட்டை தொடராமல் பாதியிலேயே வெளியேறிவிட்டார் ஜனனி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜனனிக்கு விஜயின் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அடுத்த மாதம் அக்டோபர் 19-ஆம் தேதி அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வந்துவிடும்.

இதையும் படிங்க: ஐயோ அப்படி மட்டும் சிரிக்காத!.. ஹார்ட்டு வீக்கு!.. சிம்பு பட நடிகையை பாத்து மயங்கும் ரசிகர்கள்..

இந்நிலையில், கடற்கரை அருகே உள்ள சாலையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் பிக் பாஸ் ஜனனி. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சாலையோரத்தில் தேவதை ஒன்று நடந்து வருவது போல உள்ளது என வர்ணித்து வருகின்றனர்.

ஆனால், அதேசமயம் சில நெட்டிசன்கள் பிக்பாஸ், லியோ வாய்ப்பு கிடைத்தும் ரோட்டுக்கு வந்துட்டீங்களே ஜனனி எனக் கிண்டல் செய்து வருகின்றனர். லாஸ்லியா, ஷிவானி நாராயணன் போல ஜனனிக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் ஏதும் அமையவில்லையா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த வீடியோவை காண இந்த லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CxpyyD6SELy/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Next Story