கொஞ்சம் பீப் போடுங்க பிக் பாஸ்!.. கெட்ட வார்த்தையில் பேசிய மாயா.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்!..

பிக் பாஸ் நிகழ்ச்சி 18 பிளஸ் நிகழ்ச்சியாக மாறிவிட்டது என ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைங்க எல்லாம் பார்க்குறாங்க என கமல் பெருமையாக பேசி வரும் நிலையில், இப்படி கெட்ட வார்த்தைகளை பேச எப்படி அனுமதிக்கிறீங்க என்றும் பீப் போடாமல் அடுத்த நாள் வரும் ஸ்ட்ரீமிங்கில் ஓடிடி என்பதால் தடையின்றி போடுறீங்களா என்றும் கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

விக்ரம் படத்தில் ஐட்டமாகவும் லியோ படத்தில் கமல் டீமில் உள்ள புதிய ஏஜென்ட்டாகவும் நடித்துள்ள மாயா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிக்ஸன் உடன் பேசும் போது கெட்ட வார்த்தை பேசுவதும், ஐஷு அசிங்கமாக பேசுவதுமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பீப் ஷோவாக மாறியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க: கழுத்துல என்ன நாய் சங்கிலியா?.. காவாலா தமன்னாவை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்!..

எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், போட்டியாளர்கள் அசிங்கமாக பேசியும் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே அவர்களை வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

புதிது புதிதாக போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே அனுப்பி உள்ள நிலையில், கடந்த வார இறுதியில் யுகேந்திரன் மற்றும் மிக்சர் வினுஷாவை வெளியே அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைக்க என்னவெல்லாம் செய்வது என்று தெரியாமல் போட்டியாளர்களை கெட்ட வார்த்தை பேச வைத்து சர்ச்சையை கிளப்புகின்றனரா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

கமல் சார் காதுக்கு இதெல்லாம் கேட்காதா? என்றும் இதையெல்லாம் தட்டிக் கேட்க மாட்டாரா? என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it