சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!.. பச்சோந்தியுடன் போய் பாக்ஸிங் பண்ணலாமா பூர்ணிமா?..

பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட பூர்ணிமா ரவி மாயாவின் புல்லி கேங்கில் சேர்ந்து விட்ட நிலையில், அவருக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. அதே போல பிக் பாஸ் வீட்டில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்தது போல ரசிகர்களும் கணிசமாக கிடைத்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் போட்டியாளராக வரும் முன்னரே அராத்தி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் பூர்ணிமா ரவி. பிக் பாஸ் பிரபலமான பூர்ணிமாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். சமீபத்தில் தனது அம்மாவுடன், உயிரியல் பூங்கா ஒன்றுக்கு பூர்ணிமா சென்ற நிலையில், அங்கே பெரிய பச்சோந்தி ஒன்றை எடுத்து பூர்ணிமாவின் தோள் மீது வைத்தனர்.

இதையும் படிங்க: நிஜமாவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சினையா? பொன்னியின் செல்வனை அடுத்து சூடுபிடிக்கும் தக் லைஃப்

பூர்ணிமாவின் தோளில் ஏறி கொண்ட பச்சோந்தி ரொம்பவும் பொறுமையாகவே இருந்தது. ஆனால் இவர் கையை காலை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார் அல்லவா? அமைதியாக இருந்த பச்சோந்தி உடன் பாக்சிங் போடுவது போல சைகை காட்ட தன்னை தாக்க வருகிறார் என நினைத்த பச்சோந்தி பதிலுக்கு இவரை தாக்க முற்படும் போது பயந்து போய் தூக்குங்க தூக்குங்க என அலறி விட்டார். உடனடியாக பச்சோந்தியை அவர் மீது விட்ட பாதுகாவலர் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்.

கொஞ்சம் விட்டு இருந்தாலும் பூர்ணிமாவை அந்த பச்சோந்தி பஞ்சர் பண்ணியிருக்கும் எனக்கு ரசிகர்கள் கிண்டல் செய்து அந்த வீடியோவை வைரலாகி பரப்பினர். அதோடு, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க பூர்ணிமாவே அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.

இதையும் படிங்க: அதுக்கு இத்தனை வீடியோவா? பிசினஸை தூக்கி நிறுத்தி அஜித் போட்ட சிம்பிள் ப்ளான்!…

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் பூர்ணிமா அமையவில்லை. விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5ல் பூர்ணிமாவும் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக நயன்தாராவுடன் இணைந்து பூர்ணிமா ரவி அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். தினேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மற்றும் பூர்ணிமா ரவி நடித்த அன்னபூரணி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் அந்த படம் சர்ச்சை காரணமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தது.

Related Articles
Next Story
Share it