PradeepAntony: ஓவர் குசும்பு தான்!... திருமணம் முடிந்த கையோட பிரதீப் ஆண்டனி செஞ்ச வேலை... செம வைரல்!...
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனி திருமணம் முடிந்த கையோடு வெளியிட்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தால் கூட இந்த அளவுக்கு பேரும் புகழும் அவருக்கு தேடி வந்திருக்காது.
தமிழில் அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த அருவி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்தான் பிரதீப் ஆண்டனி. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்திருந்தாலும், பெரிய அளவில் கவனம் பெறவில்லை. கவினின் நண்பனாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் புகுந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பலரிடமும் கொண்டு சேர்த்தது.
இதையும் படிங்க: Vijayasanthi: அடி வாங்கி தான் சூப்பர் ஸ்டார் ஆனேன்.. நீண்ட நாளுக்கு பிறகு விஜயசாந்தி கொடுத்த பேட்டி
பிக் பாஸ் வீட்டில் இருந்த பெண்கள் இவருக்கு எதிராக உரிமை குரல் கொடுக்க உடனே உலகநாயகன் கமலஹாசன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். இதனால் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக ஒரு ஆர்மியே உருவாகி கமலஹாசன் அவர்களை சமூக வலைதள பக்கங்களில் திட்டி தீர்த்து வந்தார்கள்.
பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த சில மாதங்களுக்கு பின்னர் தனது நீண்ட நாள் காதலியான பூஜாவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார். திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் பதில் கூறாமல் இருந்து வந்த பிரதீப் ஆண்டனி திடீரென்று நேற்று மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
திருமண புகைப்படத்தை பிக் பாஸ் சுரேஷ் தாத்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி இருந்தார். இந்த திருமண நிகழ்வில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கின்றார்.
இதையும் படிங்க: Dhanush55: பூஜை போட்டாச்சு!… சொன்ன மாதிரியே தட்டி தூக்கிட்டாரே… தனுஷ் 55 படத்தின் பரபர அப்டேட்!…
கட்டா குஸ்தி திரைப்படத்தில் வரும் பஸ்ட் நைட் காட்சியை பகிர்ந்து வாழ்த்துக்கு நன்றி என பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோவில் சோபா விற்கும் சிறுவன் பேசுவது போன்று எடிட் செய்யப்பட்டிருந்தது. 'இதை நினைத்து ஒரு வாரமா தூங்கவே இல்ல, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்' என்று அவர் பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஓவர் குசும்பு தான் உங்களுக்கு என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
Vaazhthukkalukku Nandri 🙏 pic.twitter.com/ZMadvWz9AY
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 8, 2024