
Cinema News
நீ மட்டுமா டான்…?சிவகார்த்திகேயன் நினப்புல மொத்தமா மண்ண அள்ளி போட்ட பிக்பாஸ் பிரபலம்…!
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 13 ஆம் தேதி வெளியாக காத்துக் கொண்டிருக்கும் படம் டான். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
மேலும் விஜய்டிவி பிரபலங்கள் சிவாங்கி, பிக்பாஸ் பிரபலம் ராஜூ, மனோபாலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் உட்பட அவரவர் அனுபவத்தை பகிர்ந்தனர்.
அப்போது இந்த படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலம் ராஜூ கூறுகையில், “ தனக்கென ஒரு நாற்காலியை போட்டு கம்பீரமாக உட்காந்து இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு டானாக இருக்கிறார், நடிகை பிரியங்கா மோகன் – திடீரென வந்து பக்கத்துல அவரும் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்திருக்கும் அவரும் டான், எஸ்.ஜே. சூர்யா – சுத்தி எல்லாரும் பாத்துக் கொண்டிருக்க அவர் நடிப்பு எல்லாரையும் வாயை பிளக்குற மாதிரியான நடிப்பு அவரும் டானாகத்தான் இருக்காரு, ஆகையால் இந்த படத்தில நடிச்ச எல்லாரும் டான் தான்” என்று சொல்லி முடிக்க விழாவில் இருந்த அனைவரும் அதைக் கேட்டு சிரித்தனர்.
சும்மா ஒரு போஸ்டருக்கே கடுப்பாகி போன நம்ம சிவகார்த்திகேயன் ராஜூவின் இந்த பேச்சை கேட்டு என்ன மன நிலைமையில் இருப்பார் என்று தெரியவில்லை. மேலும் ராஜூ பேசும் போது ரசிகர்கள் அனைவரும் அவரை பேசவே விடவில்லை. ராஜூபாய், ராஜூபாய் என கூக்குரலிட்டனர். ஏனெனில் அவருக்கு பிக்பாஸ் மூலம் அவரின் காமெடியால் கிடைத்த ரசிகர்கள் தான் அவர்கள். அவர்கள் அப்படி சொல்லும் போது சிவகார்த்திகேயனை குளோசப்பில் காட்ட அவரின் முகமோ கடுப்பும் கலையுமாக தெரிந்தது.