More
Categories: Cinema News latest news

சேலையை கட்டாமல் அப்படியொரு போஸ்!.. ஜாக்கெட்டும் போடலையா?.. விஜய் பட நடிகையின் அட்ராசிட்டி!..

பிக் பாஸ் பிரபலமான சம்யுக்தா நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் ஷாமின் மனைவியாக நடித்திருப்பார். பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சம்யுக்தா பாலாஜி முருகதாஸ்,  ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலருடன் நல்ல நட்புடன் பழகி வந்தார். அனிதா சம்பத்துக்கும் இவருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் சில சர்ச்சைகள் வெடித்தன.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி, விஜய் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால், தொடர்ந்து சினிமாவில் பெரிதாக இவருக்கு வாய்ப்புகள் குவியவில்லை. துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சம்யுக்தா அடிக்கடி பாவனா பாலகிருஷ்ணாவுடன் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: முரளிக்குப் பிரச்சனையே சேர்க்கை சரியில்லாதது தான்… பிரபலம் சொல்லும் தகவல்

இந்நிலையில், தற்போது சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையை அணியாமல் போர்த்திக் கொண்டு இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பட்டு சேலையை கட்டாமல் இப்படி போர்த்திக் கொண்டு இருக்கிறாரே என நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். மேலே ஜாக்கெட் கூட அணியாததை போல அவர் அளித்துள்ள போஸ் இணைய வாசிகளை உருக வைத்துள்ளது.

இந்த வயதிலும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வாய்ப்புகளை சம்யுக்தா கவர்கிறாரே என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு 1.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: ‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்…’ அது தான் இளையராஜா..!

தொடர்ந்து ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சம்யுக்தாவின் இந்த புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. நடிகைகள் அதுல்யா மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட இளம் நடிகைகள் எல்லாம் அவரது போட்டோவுக்கு வாவ் என கமெண்ட் போட்டுள்ளனர்.

Published by
Saranya M

Recent Posts