பிக்பாஸ் சீசன் 7ல் எண்ட்ரியாகும் விஜய் அண்ணன்… அப்போ இவர் தான் டைட்டில் வின்னரோ..!

தமிழின் ஹிட் நிகழ்ச்சியாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்னும் இரண்டே நாளில் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் வீடு எப்படி இருக்கும். போட்டியாளர்கள் யாரெல்லாம் இருப்பார்கள் என பலரும் செம வெயிட்டிங்கில் இருந்து வருகின்றனர்.

60 கேமராவிற்கு முன் எந்த ஒரு போன், சோஷியல் மீடியா வசதியும் இல்லாமல் ஒரே வீடு நூறு நாள் இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம் என்ற ஆர்வத்திலே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் பலர். 6 சீசனை கடந்த பிக்பாஸ் தமிழ் தற்போது 7வது சீசனை அடைந்து இருக்கிறது.

இதையும் படிங்க: முதல் அடியே மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.!. ஜெயிலரின் அந்த சாதனையை காலி செய்த லியோ..!

இன்று இந்த சீசனின் டான்ஸ் ஷூட் நடந்து வரும் நிலையில் நாளை போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்று விடுவார்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அக்டோபர் 1ந் தேதி பிக்பாஸ் தமிழ் ஒளிபரப்பாக இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் முதல் மூன்று சீசன் பட்டைய கிளப்பிய நிலையில் கடந்த மூன்று சீசனாக பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. இதனால் இந்த சீசனில் நிறைய மாற்றங்களை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ஒரு வீடு இல்லாமல் இரண்டு வீடு, நீச்சல் குளம் இல்லை, ஒரே கிச்சன் என பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: களைக்கட்டும் பிக்பாஸ் சீசன்7… அட ஓவியாவின் ஃபேவரிட் ப்ளேஸ் இல்லையா? செம சர்ப்ரைஸ் தானுங்கோ..!

போட்டியாளராக கலந்து கொள்ளுபவர்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே இருக்கிறது. அதில் விசித்ரா, விஜய் டிவி புகழ் சரவண விக்ரம், விசித்ரா என பலரும் வரிசைக்கட்டி நிற்கின்றனர். தற்போது இந்த லிஸ்ட்டில் 12பி படத்தில் நடித்து ஹிட் அடித்த ஷாம் கலந்து கொள்ளலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் சமீபத்தில் வாரிசு படத்தில் விஜயின் அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it