Biggboss Tamil: டாஸ்கு கொடுத்தா கெடுக்குறதுக்கே இருக்கீங்களே அருண்… பிக்பாஸில் களேபரம்!...
Biggboss Tamil: பிக் பாஸ் சீசன் 8-ல் இன்று நடந்து வரும் வார டாஸ்கில் மீண்டும் கலவரம் நடந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் போட்டியாளர் அருண் பிரசாத்தை கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 முதல் 50 நாள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் தயாரிப்பு குழு நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் தீமை மாற்றியது. தொடர்ந்து வார நாட்களில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் நிகழ்ச்சி தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.
கடந்த வாரம் நடந்த ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்கில் போட்டியாளர்கள் மோதிக்கொண்டனர். அதிலும் அன்ஷிதா எக்கச்சக்கமாக கத்திக் கொண்டிருந்தார். இருந்தும் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு நிறைய கன்டென்ட் கிடைத்தது.
ஆனால் அந்த டாஸ்கில் கூட விளையாட்டை சரியாக விளையாட விடாமல் தடுத்ததாக சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் மீது குற்றச்சாட்டை எழுந்தது. டாஸ்க் கொடுக்காமல் வெறும் பேச்சுவார்த்தை நடத்தும்போது அமைதியாக இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்கில் அதை கெடுப்பது போல நடக்கலாமா என கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் இல்லத்தில் முதலாளி மற்றும் யூனியன் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாமினேட் ஆன போட்டியாளர்கள் ஒரு பக்கமும் நாமினேட் ஆகாத போட்டியாளர்கள் ஒரு பக்கமும் இடம்பெற்றுள்ளனர். இதில் முதலாளி அணியில் இருக்கும் முத்துக்குமரன் மற்றும் யூனியனில் இருக்கும் அருண் பிரசாத்திற்கு சண்டை உருவாகியுள்ளது.
முதலாளிகள் தான் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு விதிகளை அமைக்க வேண்டும். அந்த வகையில் அவர்கள் சொல்வதைக் கேட்க முடியாது என அருண் பிரசாத் வாதம் செய்து கொண்டிருப்பதை தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பார்க்க முடிகிறது.
விளையாட்டை விளையாடாமல் இப்படி முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதும், பிரச்சனை செய்வதும் இவர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஊர்கதை பேசவா உள்ளே வந்தார்கள் எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.