அருணிடம் அன்ஷிதா கேட்ட அந்த விஷயம்… விஜே விஷாலை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

by Akhilan |
பிக் பாஸ் தமிழ்
X

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக காதல் கதைகள் வேலை செய்யாமல் போக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள மீண்டும் அதை கையில் எடுத்த பெண் போட்டியாளர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு காமெடியாக மாறி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இந்த சீசன் பெரிய ஏமாற்றம்தான் என கூற வேண்டும். கடந்த சீசன் போல பெரிய அளவில் டாஸ்க் இல்லை என்றாலும் அதிக ஆர்வம் கொடுத்த போட்டியாளர்களும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தங்களுடைய இடத்தை தக்க வைத்துக்கொள்ள நிறைய வழிகளில் போராடி வருகின்றனர். ஒரு பக்கம் சண்டை போட்டு, அழுது சீன் போட்டு என ஆளாளுக்கு ஒரு விஷயத்தை கையில் எடுத்து செய்து வருகின்றனர்.

அதுபோல தற்போது நிகழ்ச்சியில் காதல் மன்னனாக மாறியிருக்கிறார் நடிகர் விஜே விஷால். ஏற்கனவே போட்டியாளர் தர்ஷிகாவை காதல் வலையில் சிக்க வைத்து ஒரு கட்டத்தில் அவர் தன்னுடைய விளையாட்டை இழந்தார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றினார். இந்த வாரம் விஷால் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி வெளியேறி இருக்கின்றனர்.

அன்ஷிதா வெளியேறுவதற்கு முந்தைய நாள் நடிகர் அருண் பிரசாத்திடம், விஷால் என்னை காதலிக்கிறானா என கேட்டு இருக்கிறார். அதற்கு அரும்பிரசாத் எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் நான் தான் சந்தோஷமான ஆளாக இருப்பேன். உனக்கு எப்படி என்கிறார். இதற்கு அன்ஷிதா, குழப்பமாக இருக்கிறது. சரிதானா என கேட்கிறார். அருணும் கண்டிப்பா சரிதான் உனக்கும் காதல் தேவை என்கிறார்.

விஷால் அன்ஷிதாவுக்கு எதுவும் சிக்னல் காட்டினாரா இல்லை அவர் தப்பாக புரிந்து கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் விஜே விஷாலின் தோழி நேஹா வந்த போதே நீங்கள் இடம் கொடுக்காமல் தர்ஷிகாவுக்கு அந்த எண்ணம் வந்திருக்காது என்பார்.

போட்டியில் நிலைத்து நிற்க விஷால் பின்பற்றும் இந்த வழி தற்போது ரசிகர்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பிரச்சனையோடு உள்ளே வந்த அன்ஷிதா மேலும் சிக்கலில் சிக்காமல் இது நடந்த அடுத்த நாளே வீட்டை விட்டு வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு சற்று நிம்மதியாகி இருக்கிறது.

Next Story