யக்கா… உங்க லவ்வருக்கு இப்படி VJSயை அசிங்கப்படுத்தலாமா? அர்ச்சனாவை கலாய்க்கும் ரசிகர்கள்

by Akhilan |
அர்ச்சனா_அருண் பிரசாத்
X

அர்ச்சனா_அருண் பிரசாத் 

Archana: பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவிச்சந்திரன் தன்னுடைய காதலர் அருண் பிரசாத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து ஒரு நிலையில் மீண்டும் தொகுப்பாளர் விஜய் சேதுபதியை சாடி இருப்பது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்முறையாக பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்ட தமிழ் ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஐந்து வைல்டு கார்டு எண்ட்ரியுடன் அர்ச்சனா ரவிச்சந்திரனும் உள்ளே வந்தார். முதல் சில நாட்கள் அழுது கொண்டிருந்தவர்.

பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதும் அதை தனக்காக பயன்படுத்திக் கொண்டார். எக்கச்சக்கமாக சண்டை போட்டு எதிரி குதித்து அவர் செய்த சேட்டைகள் எல்லாம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்தது. ஏற்கனவே பிரதீப்பை வெளியேற்றிய கும்பல் என்பதால் அவர்களின் இருந்து யாரும் வென்று விடக்கூடாது என்பதில் ரசிகர்கள் தீர்மானமாக இருந்தனர்.

இதில் அர்ச்சனாவின் பிஆர் வேலைகளும் சேர முதல் வைல்டு கார்டு என்று ஆக டைட்டிலை தட்டி சென்றார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் தன்னுடைய காதலர் மற்றும் நடிகரான அருண் பிரசாத்தை உள்ளே அனுப்பி வைத்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அருண் பிரசாத் சில காலமாக கன்டென்ட் கூட கொடுக்காமல் இருந்து வந்தார்.

இதனால் அர்ச்சனா அவர் மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எப்படியாவது அவரை டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என அவ்வப்போது அவர் குறித்து வரும் சர்ச்சைகள் குறித்து கமென்ட் செய்து வருவதை அர்ச்சனா வழக்கமாக செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி அருண் பிரசாத் குறித்து கிண்டலாக சொன்ன ஒரு விஷயத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் வைத்து விஜய் சேதுபதியை விமர்சித்திருந்தார். அதுவே பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்த வாரம் அவருக்கு மேலும் ஒரு பெரிய பிரச்சனை கிடைத்திருக்கிறது.

கடந்த வாரம் நடந்த யூனியன் மற்றும் லேபர் டாஸ்கில் அருண் அந்த வார்த்தை பயன்படுத்த கூடாது எனக் கூறியது சர்ச்சையானது. இதற்கு முதல்முறையாக விஜய் சேதுபதி மைக்கில் வந்து விளக்கம் கொடுத்தார். இது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனால் தன்னுடைய காதலருக்கு நெகட்டிவ் இமேஜ் உருவாகும் என நினைத்த அர்ச்சனா இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சமத்துவத்தை பகிருங்கள். அதுதான் முக்கியம். அதுதான் முக்கியம். அருண் சொன்ன வார்த்தையை திரித்து பேசுவது சரியாக இருக்குமா?

லேபருக்கு டீ இவ்வளவு போதும் எனக் கூறிய தீபக்கை சைடில் தட்டி சென்றனர். ஆனால் அருண் சொல்லாத ஒரு விஷயத்தை, திரித்து பேசி அவரின் மூளைக்குள் சென்று நீ இப்படித்தானே யோசிச்ச என்ன தொகுப்பாளர் முதல் கொண்டு மாற்றி பேசுவது எந்த வகையில் சரியாக இருக்கும்.

திடீரென ஒரு தொகுப்பாளர் மைக்கில் பேசும் பொழுது யாராக இருந்தாலும் பயம் ஏற்படும். அதனால் தான் அருணால் அவருடைய நிலையை விளக்கி கூற முடியவில்லை. ஷோவில் தான் விளக்கம் கொடுத்தாகிவிட்டதே. பின்னர் எதற்கு மைக்கில் வந்தும், தனியாக கான்வர்ஷன் ரூமில் அழைத்தும் பேசவேண்டும். அவையெல்லாம் கண்துடைப்பு போல தான் இருந்ததாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

Next Story