காதலன் அருணுக்காக உள்ளே வரும் டைட்டில் வின்னர் அர்ச்சனா… பிக்பாஸில் நடக்க இருக்கும் புது விஷயம்…

by Akhilan |
பிக் பாஸ் தமிழ்
X

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் தற்போது பிரீஸ் டாஸ்க் நடந்து வரும் நிலையில் அருண் பிரசாத்திற்காக கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா உள்ளே வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தாலும் அதை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. தொடர்ச்சியாக ரசிகர்கள் நிகழ்ச்சி மீது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் கிரியேட்டிவிவ் டீம் மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வார டாஸ்குகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கண்டெண்டுகள் வரத் தொடங்கியது. அதிலும், கடந்த வாரம் நடந்த கன்வேயர் பெல்ட் டாஸ்குகள் பரபரப்பாக அமைந்தது.

தொடர்ச்சியாக இந்த வாரம் குடும்பங்கள் உள்ளே வரும் பிரீஸ்க் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. வரிசையாக உள்ளே வரும் போட்டியாளர்களின் குடும்பங்கள் தங்கள் பிள்ளைக்கு வாழ்த்தையும், மற்ற போட்டியாளர் மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை சொல்லி செல்கின்றனர்.

இந்நிலையில் அருண் பிரசாத்தின் காதலியும், கடந்த சீசன் டைட்டில் வின்னரான அர்ச்சனா வீட்டிற்குள் இன்று நுழைய இருக்கிறாராம். இதன் எபிசோட்கள் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. ப்ரீஸ்க் டாஸ்கில் டைட்டில் வின்னர் வருவது இதுவே முதல்முறையாக இருக்கிறது.

இந்த சீசன் தொடங்கியதிலிருந்து அருண் பிரசாத்திற்கு, அர்ச்சனா தன்னுடைய ஆதரவை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அவரை தொகுப்பாளர் விஜய் சேதுபதி கடுமையாக சாடும் போது தன்னுடைய அதிருப்தியையும் வெளிப்படையாகவே வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த கன்வேயர் டாஸ்கில் அருணின் வார்த்தையை மொத்த டீமும் திரித்து விட்டதாக கடும் கண்டனங்களை வீடியோவாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அர்ச்சனா உள்ளே வருகிறார். இதனால் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கண்ணதாசனை வம்பிழுத்த எம்எஸ்வி... போட்டாரே ஒரு போடு அந்தப் பாட்டால...!

Next Story