சட்டையில்லாமல் அன்ஷிதாவுடன் ஜெப்ரி செய்த வேலை… வைரலாகும் வீடியோ…

by Akhilan |   ( Updated:2025-01-03 16:29:58  )
பிக் பாஸ் தமிழ்
X

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ல் வெளியேறிய போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் அடித்த லூட்டியை வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கான டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டது.

தங்களுடைய திறமையை மீறி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். பல போட்டியாளர்கள் தங்களுடைய வெற்றியை நெருங்கினர். இதில் டிக்கெட்டை வெல்ல முத்து மற்றும் ராயனுக்கு அதிக வாய்ப்பு இருந்தது.

ஆனாலும் மற்ற போட்டியாளர்களான பவித்ரா, ஜாக்குலின் மற்றும் விஷால் தங்களுடைய பெஸ்ட்டை கொடுத்து கடுமையாக போராடினர். இருந்தும் எல்லா போட்டிகளிலும் ஓரளவு வெற்றியை கைப்பற்றிய ராயனுக்கு கடைசியில் தற்போது டிக்கெட் டூ பினாலே கிடைத்திருக்கிறது.

இதனால் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி வாரத்துக்கான முதல் போட்டியாளராக முன்னேறியிருக்கிறார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ஒரு அணியாக சேர்ந்து தங்களுடைய புத்தாண்டை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சத்யா, ஜெஃப்ரி, ஆனந்தி மற்றும் அன்ஷிதா இணைந்து நீச்சல் குளத்தில் எஞ்சாய் செய்து இருக்கின்றனர். கையில் சத்யா சிகரெட்டுடனும், வெற்றுடம்பில் ஜெப்ரியும் ரீல்ஸ் செய்துக்கொண்டு இருந்தனர். மேலும் அன்ஷிதாவை தோளில் தூக்கி போட்டு ஜெப்ரி நீச்சல் குளத்தில் விழுவது போலவும் காட்சிகள் இருக்கிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டம் கூட்டமாக அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சி முடிவதற்கு முன்னரே ஒரு அணி தங்களுடைய வேலையை தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story