பிக்பாஸில் தமிழ் 8ல் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தானா? நல்லாதான போச்சு
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் எட்டில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த அப்டேட்கள் இணையத்தில் கசிய தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி சமீபத்திய வாரங்களாக சூடு பிடித்து நடந்து வருகிறது. முதலில் பதினாறு போட்டியாளர்கள் உள்ளே நுழையும்போது ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆர்வம் ஏற்படவில்லை. உள்ளே இருந்த அனைவருமே சீரியல் பிரபலங்கள் என்பதால் பெரிய அளவிலான கண்டென்ட்களும் ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஆறு புதிய பிரபலங்கள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். இதில் மஞ்சரி, ரானவ், ராயன் தவிர வர்ஷினி, ரியா மற்றும் சிவகுமார் எலிமினேட் ஆகிவிட்டனர். அது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு வாரங்களாக இரண்டு நாமினேஷன்கள் தொடர்ச்சியாக நடந்து வந்திருக்கிறது.
75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் நான்கு வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் முத்துக்குமாருக்கு அதிக வாக்குகளும் ராயன், ரஞ்சித் மற்றும் அன்ஷிதாவிற்கு குறைந்த வாக்குகள் கிடைத்து வருகிறது. இதில் நடிகர் ரஞ்சித்தை ஃபேமிலி சுற்று வரை தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏனெனில் அவருக்காக வெளியில் பேசி வரும் நடிகை மற்றும் அவர் மனைவியான பிரியா ராமன் உள்ளே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடியாக பேசி வரும் பிரியா ராமன் உள்ளே வந்து நிகழ்ச்சிக்கு சில கன்டென்ட் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் இந்த வாரம் அன்ஷிதா அல்லது ராயன் உள்ளிட்ட இருவரில் ஒருவர் வெளியேற அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே ஆட்டத்தின் முதல் வாரங்களிலேயே அன்ஷிதாவை வெளியேற்ற ரசிகர்கள் விருப்பப்பட்டதால் அவருக்கு இந்த வாரம் கடைசியாக கூட இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.