Biggboss Tamil: வெளியேறிய முதல் மிக்ஸர்… இன்னொரு லட்டும் இருக்காம்… இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன்…

by Akhilan |
விஜய் சேதுபதி
X

விஜய் சேதுபதி 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வாரம் மீண்டும் இரண்டு எலிமினேஷங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த ஒரு போட்டியாளரும் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை சந்தித்து வந்தது. இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டீமை தயாரிப்புக் குழு மாற்றியது.

இந்த மாற்றம் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு, மூன்று வாரங்களாக நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு நிறைய கண்டெண்டுகளும் குவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் யூனியன் மற்றும் முதலாளி டாஸ்க் நடத்தப்பட்டது. முதல் முறையாக நடந்த இந்த டாஸ்கில் ரசிகர்களுக்கு மிகுந்த சுவாரசியமாக இருந்ததாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் ரொம்ப நாட்களாகவே அமைதியாக இருந்த அருண் இந்த வாரம் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி விட்டார்.

இந்நிலையில் இந்த வார இறுதியின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. இதில் போட்டியாளர் அருண் பிரசாத்திற்கு விஜய் சேதுபதி நிறைய கண்டனங்களை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த வாரமும் கடந்த வாரம் போல இரண்டு எலிமினேஷங்கள் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

அந்த வகையில் சனிக்கிழமை எபிசோடில் போட்டியாளர் சத்யா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய மனைவி என் எஸ் கே ரம்யா பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் கலந்து கொண்டார். அவரும் சத்யா போலவே பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்காமல் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தர்ஷிகாவே வெளியேற்றி இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்திருக்கிறது. சரியான ரூட் பிடித்து விளையாடிக் கொண்டு வந்த தர்ஷிகா சமீப நாட்களாகவே விஷாலுடன் காதல் வலையில் விழுந்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார். இதனால் இவரின் வெளியேற்றமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

Next Story