பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் பிடித்தது இவர்கள் தானாம்.. அட போச்சே?
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் இப்போட்டியில் நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் பிடித்த போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதிக்கட்ட பினாலே இன்று பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. கடந்த சீசன்களுக்கு இருந்தது போல இந்த சீசன் பெரிய அளவு ரசிகர்களுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. ஏகப்பட்ட ஏமாற்றத்துடன் ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் பேச்சுக்கள் வைரலாகி வந்து நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் அதுவும் ரசிகர்களுக்கு அலுப்பை தட்டியது. தொடர்ச்சியாக எந்த டாஸ்குகளும் கொடுக்கப்படாமல் ரசிகர்களுக்கு நிகழ்ச்சி பெரிய போர் அடிக்க தொடங்கியது.
டிஆர்பி பெரியதாக அடிப்பட நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டீம் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்தே நிகழ்ச்சி மீண்டும் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கியது. ஒரு வழியாக வார டாஸ்குகள் நடத்தப்பட்டு ரசிகர்களுக்கு ஓரளவு கண்டெண்ட் கொடுத்தனர்.
தொடர்ந்து, எப்போதும் போல இல்லாமல் அசால்ட்டாக பணப்பெட்டியை தூக்கி செல்ல இடம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அது கடுமையான டாஸ்க்கை விளையாட வேண்டும். அதை வெற்றிக்கரமாக முடித்தால் பணத்துடன் நிகழ்ச்சியில் தொடரவும் வாய்ப்பு வரும்.
அப்படி பைனலிஸ்ட்டுகளாக இருக்கும் முத்துகுமரன் 50 ஆயிரம், ரயான் 2 லட்சம், பவித்ரா 2 லட்சம், விஜே விஷால் 5 லட்சம் எடுத்தனர். இதில் தற்போது நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தினை பவித்ரா மற்றும் ரயான் பிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முதலில் மூன்று இடங்களில் முத்துகுமரன், சவுந்தர்யா மற்றும் விஜே விஷால் இருந்து வருகின்றனர். இதில் கப்பை முத்துகுமாரன் தட்டி சென்று இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக கசிந்து வருகிறது.