பணப்பெட்டி போனா போகுது… லட்சத்தை குவிச்சிட்டாரே… பிக்பாஸ் ஜெப்ரியின் சம்பளம் இதானாம்…

by Akhilan |
ஜெஃப்ரி
X

ஜெஃப்ரி

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சனிக்கிழமை எபிசோட்டில் ஜெப்ரி வெளியேறி இருக்கும் நிலையில் அவருக்கு சம்பளமாக மட்டும் இத்தனை லட்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழின் கடந்த சீசன்களாக தனி பாடகர்களை உள்ளே அழைத்து வருகின்றனர். அந்த வகையில் அசல் கோளாறு, நிக்ஸனை தொடர்ந்து இந்த சீசனில் ஜெப்ரி உள்ளே வந்தார். இதில் நிக்ஸனை தவிர மற்ற இருவருமே பெரிய அளவில் சோபிக்கவில்லை.

ஜெப்ரி, போட்டியாளர் சவுந்தர்யாவுடனே இருந்து 80 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டார். இருந்தும் அவரிடம் இருந்து பெரிய அளவில் நிகழ்ச்சிக்கு கண்டென்ட் கிடைக்கவில்லை. இதனால் அவரை இனி வைத்து பெரிய அளவில் தேவையும் இல்லை.

வீட்டுக்குள் கூட்டம் அதிகமாகிய நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஜெப்ரி எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். பொதுவாக மற்ற சீசன்களில் இரட்டை எலிமினேஷன் என்பது அரிதாக நடக்கும். ஆனால் இந்த சீசனில் கடந்த மூன்று வாரமாகவே இரட்டை போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், ஜெப்ரி பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் முடிவில் இருந்தார். இது ஆட்டத்தை மாற்றும் என்பதால் அவர் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்றைய ஞாயிறு எபிசோட்டில் அன்ஷிதாவை வெளியேற்றி இருக்கின்றனர்.

இதில் ஜெப்ரிக்கு ஒரு நாளைக்கு சம்பளமாக 10 ஆயிரம் பேசப்பட்டதாம். 83 நாட்கள் வரை உள்ளே இருந்தவருக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story