பயில்வானை கலாய்த்து வம்பில் சிக்கிய பிக்பாஸ் சீசன் 8 பிரபலம்... கடைசியில் நடந்ததுதான்?!..

by Akhilan |
bayilvan ranganathan
X

bayilvan ranganathan

Bigg Boss Tamil: தமிழ் சினிமாவின் பிரபலங்களை அபாண்டமாக பேசியே வைரலானவர் பயில்வான் ரங்கநாதன். அவரையே அசராமல் பிக்பாஸ் தமிழ் பிரபலம் கலாய்த்து விட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வாரம் முதல் பைனலிஸ்ட் முடிவு செய்யும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ரசிகர்கள் யார் டிக்கெட்டை வெல்லுவார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதில் போட்டியாளர் ராயன் தற்போது வரை முன்னிலையில் இருக்கிறார். இதனால் அவர் டிக்கெட்டை வெல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்த வர்ஷினி வெங்கட் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டாகி சில வாரங்கள் ஆகியிருக்கிறது.

இவர் தற்போது லாரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்பொழுது பேசிய லாரா தன்னுடைய கதாபாத்திரம் விபச்சாரம் செய்யும் பெண்மணி உடையது.

என்னை போன்ற புது முகத்துக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்கள் கூட்டத்தில் இருந்த பயில்வான் ரங்கநாதன், படம் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பிய போது அருகில் இருந்த வர்ஷினி வெங்கட் அவருக்கு இதை போன்ற படத்தை பார்க்க ரொம்ப ஆர்வம் போல என சிரித்துக் கொண்டே கலாய்த்து இருந்தார்.

இதில் கடுப்பான பயில்வான் ரங்கநாதன், இங்கு இது போல் எல்லாம் பேசக்கூடாது என காட்டமாக பேசினார். ஆனால் இதை பொறுமையாக கேட்டு முடித்த வர்ஷினி சாரி அய்யா என்ற இரட்டை வார்த்தையுடன் முடித்துக் கொண்டார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், மற்றவர்களை பேசும்போது உங்களுக்கு மட்டும் இனித்ததா என ரசிகர்களும் கேள்வி எழுப்பிய வருகின்றனர்.

Next Story