Bigg Boss Tamil: ஒரே வாரத்தில் ரெண்டு விக்கெட்... VJSக்கே ஆப்படித்த விஜய் டிவி!..
Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கும் போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி டிஆர்பியில் பெரிய அடி வாங்கியது. இதில் சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் கிரியேட்டிவ் டீமை மாற்றியது.
அதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக வார டாஸ்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வாரம் நடந்த ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்கில் போட்டியாளர்கள் மிகுந்த ஆர்வமாக கலந்து கொண்டிருந்தனர். போட்டி பல நாட்களைக் கடந்து சூடு பிடித்தது.
அன்சிதாவின் கோபம், பவித்ராவின் அமைதி என ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் விதமாக நிறைய கண்டெண்டுகள் குவிக்கப்பட்டது. இதனால் இந்த வாரம் விஜய் சேதுபதி வரும் எபிசோடுகள் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இதைத்தொடர்ந்து நேற்று விஜய் சேதுபதியின் சனிக்கிழமை எபிசோடில் நிறைய சுவாரசிய விஷயங்கள் நடந்திருக்கிறது. தேவையில்லாமல் கத்திய சௌந்தர்யாவிற்கு விஜய் சேதுபதி டோஸ் கொடுத்திருப்பதாக தெரிகிறது. பல போட்டியாளர்கள் தங்களுடைய செயல்களுக்காக கண்டிக்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க இந்த வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என கேள்விகளும் எழுந்திருக்கிறது. இந்த வாரம் நாமினேஷனில் முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்லின், ரானவ், பவித்ரா, மஞ்சரி, சத்யா, ரஞ்சித், ராயன், தர்ஷிகா, ஆனந்தி மற்றும் சாச்சனா இடம்பெற்றிருந்தனர்.
இதில் சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் முதலிடத்தில் சேவ் செய்யப்பட்டு விட்டனர். இதைத்தொடர்ந்து யார் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்த்து வந்த நிலையில் முதலில் ஆர்ஜே ஆனந்தியை எலிமினேட் செய்திருக்கின்றனர். வீட்டிற்குள் கூட்டம் அதிகம் இருப்பதால் இரண்டாவது எலிமினேசனாக விஜய் சேதுபதியின் செல்லப்பிள்ளை சாச்சனாவும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.