டைட்டில் வின்னர் காதலருக்கே வடையா? பிக்பாஸ் சீசன் 8 எலிமினேஷன் அப்டேட்

by Akhilan |
Biggboss Tamil
X

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வார எலிமினேஷனில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிருப்தி மட்டுமே கிடைத்து வருகிறது. பல சீசன்களை பார்த்து வந்த ரசிகர்கள் கூட இந்த சீசனில் பெரிய அளவு ஆர்வம் காட்டவில்லை. தொடர்ச்சியாக விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்குள் வந்த முதல் நாள் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டார்.

ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் அவர் போட்டியாளர்களை தேடியே இல்லாமல் கமெண்ட் செய்வது போல ரசிகர்களுக்கே எண்ணத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் சரியான அளவில் தேர்வு செய்யப்படாததும் இந்த சீசனின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக பிக் பாஸ் சீசன்களில் 60 நாளை கடந்துவிட்டாலே கண்டிப்பாக இவர்தான் வெற்றியாளர் என ரசிகர்களால் முடிவு செய்யப்பட்டுவிடும். ஆனால் அதுவும் இந்த சீசனில் இழுபறியாகவே இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது.

ஆண்களில் முத்துக்குமரனும், பெண்களில் சௌந்தர்யாவும் தற்போது டைட்டில் வின்னராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் முத்துக்குமரனுக்கு இருந்த அதிகமான வாக்கினை கடைசி வாரத்தில் உள்ளே சென்ற பழைய போட்டியாளர்கள் சொதப்பி வைத்திருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த நான்கு வாரங்களாக பிக் பாஸில் இரண்டு எலிமினேஷன்கள் நடந்து வருகிறது. இதில் சனிக்கிழமை அன்று அருண் பிரசாத் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னொரு போட்டியாளராக ஆண் போட்டியாளரே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதில் குறைந்தபட்ச வாக்கினை பெற்ற விஜே விஷால் அல்லது தீபக் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெளியேறும் இந்த போட்டியாளர்கள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வீட்டிற்குள் செலபரேஷனிற்காக செல்லவும் இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story