மீண்டும் இரண்டு எவிக்ஷன்… வெளியேறிய சீரியல் நாயகி… இன்னொரு டிக்கெட் யார் தெரியுமா?
BiggbossTamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் கடந்த இரண்டு வாரமாக தொடர்ச்சியாக இரண்டு எவிக்ஷன்கள் நடந்து வரும் நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் நெட்டில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பங்கள் உள்ளே வந்தனர். தங்கள் வீட்டு பிள்ளைகளின் மீது இருக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை பூசி முழுகி பேசி சமாளித்து சென்றனர். அவர்களுக்கு எதிராக பேசிய போட்டியாளர்களையும் விடாமல் கலாய்த்து சென்றனர்.
கடந்த சீசன்களை போல இல்லாமல், பெரிய அளவில் எந்த போட்டியாளர்களுக்கும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவவில்லை. இதை கருத்தில் கொண்ட பிக் பாஸ் குழு கடைசி நாளான நேற்று பிரபலங்களின் செலிப்ரிட்டி நண்பர்களை உள்ளே அனுப்ப திட்டமிட்டது.
இதில் ஆறு போட்டியாளர்களின் நண்பர்கள் மட்டும் உள்ளே வந்தனர். அதில் சௌந்தர்யா தன்னை பார்க்க வந்த, முன்னாள் போட்டியாளர் விஷ்ணு விஜயுடன் தன்னுடைய காதலை எல்லோரும் முன்னால் அதிரடியாக ப்ரொபோஸ் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
கடந்த சீசன் வெற்றியாளரான பிக் பாஸ் சீசன் 7 அர்ச்சனா உள்ளே வந்து தன்னால் முடிந்த டிப்ஸ்களை தன்னுடைய காதலர் அருண் பிரசாத்திற்கு சொல்லி சென்றார். அவரும் தான் அதிகபட்சமாக அழைத்து வந்த ஹர்லி குயின் இவர்தான் எனவும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நாள் இந்த வார இறுதியில் பெரிய அளவில் சர்ச்சைகள் இருக்காது. ஆனாலும் அடுத்த வாரம் ஃபைனலுக்கான டிக்கெட் டூ பினாலே நடத்தப்பட இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி அதிகபட்சமாக இரண்டிலிருந்து மூன்று வாரம் மட்டுமே இருக்கும் இடையில் வீட்டிற்குள் இதுவரை 12 போட்டியாளர்கள் உள்ளனர்.
அதனால் இந்த வாரமும் மீண்டும் இரண்டு எவிக்ஷன்கள் நடத்தப்பட இருக்கிறது. சனிக்கிழமை எபிசோடில் நடிகை அன்சிதா வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்குள் உள்ளே வந்தபோது சர்ச்சையுடன் வந்தவர் தற்போது ஓரளவு நல்ல பெயருடன் வெளியே சென்று இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் விஜே விஷால் அல்லது ஜெப்ரி வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் இன்னமும் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்களிடம் ஆர்வம் நிலவி வருகிறது.