Biggboss Tamil8: மிஸ்ஸான 10 லட்சம்… ஆனா தட்டி தூக்கிய கோடி? வின்னர் முத்துகுமரன் பரிசுத்தொகை விவரம்
Biggboss Tamil8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன்று இறுதி கட்ட எபிசோடு நடந்து வரும் வேளையில் டைட்டில் வின்னராக முத்துகுமரன் தேர்வாகி இருப்பதாகவும் அவருக்கு கிடைத்த பரிசுதொகை குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றி கரமாக இறுதி நாளை எட்டிவிட்டது. தற்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த எபிசோட் நாளை டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் உள்ளே செல்வார்கள்.
ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த மொத்த போட்டியாளர்களும் விஜய் டிவியின் பிரபலங்கள்தான். இதுவே நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய மைனசாக தொடங்கியது. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் கண்டெண்ட்டே இல்லாமல் அதளபாதாளத்திற்கு சென்றது.
இதைத் தொடர்ந்து வார டாஸ்குகள் நடத்தப்பட மீண்டும் நிகழ்ச்சி சூடுபிடித்தது. ஒவ்வொரு போட்டியாளர்களும் சண்டை பிடித்துக் கொள்ள பார்க்க மீண்டும் ரசிகர்களுக்கு ஆர்வம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 16 போட்டியாளர்கள் உள்ளே சென்று இருக்க வைல்ட் கார்டாக 6 போட்டியாளர்களும் உள்ளே அனுப்பப்பட்டனர்.
இதனால் வீட்டிற்குள் கூட்டம் கூட கடந்த ஐந்து வாரங்களாக இரண்டிரண்டு போட்டியாளர்களாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இறுதி நாளாக இன்றும் முதலில் இரண்டு எலிமினேஷன்கள் நடந்திருக்கிறது.
ரயான் மற்றும் பவித்ரா வீட்டில் இருந்து நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் பிடித்த வெளியேறி இருக்கின்றனர். இதில் ரயான் டாஸ்குகளில் தன்னை நிரூபித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடன் வெளியேறி இருக்கிறார். தற்போது முதல் மூன்று இடத்தை முத்துக்குமரன், சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் பிடித்திருக்கின்றனர்.
இதில் வீட்டில் இருந்த பைனலிஸ்ட்களில் ரயான் 2 லட்சமும், விஜே விஷால் 5 லட்சமும், பவித்ரா 2 லட்சமும், முத்துகுமரன் 50 ஆயிரம் எடுக்க மீதம் இருந்த வின்னர் தொகையான 40 லட்சத்து 80 ஆயிரத்தினை முத்துக்குமரன் டைட்டிலுடன் தட்டி சென்று இருக்கிறார்.
102 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாளைக்கு சம்பளமாக 10 ஆயிரம் பேசப்பட்டு இருக்க 10 லட்சத்து 20 ஆயிரம் சம்பாரித்து இருக்கிறார். மேலும் கடந்த சீசன் வின்னர் அர்ச்சனாவுக்கு கொடுத்தது போல கார் மற்றும் வீட்டு மனை கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.