பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகாவின் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

by Akhilan |
தர்ஷிகா சத்யா
X

தர்ஷிகா சத்யா  

Biggboss Tamil: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் இருந்து கடந்த வார இறுதியில் வெளியேறிய சத்யா மற்றும் தர்ஷிகா நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் கடந்த சில வாரங்களாகவே சூடு பிடித்து இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் டாஸ்க் நிகழ்ச்சியின் இழந்த டிஆர்பியை எகிற வைத்து இருக்கிறது. தொடர்ச்சியாக ரசிகர்கள் மீண்டும் நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐந்து வைல்ட் கார்ட் எண்ட்ரி உள்ளே நுழைந்த பின்னர் நிகழ்ச்சி பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் நிகழ்ச்சியில் சுணக்கம் தொடர்ந்தது. இதனால் கிரியேட்டிவ் டீமை மாற்றியது பிக்பாஸ் டீம். பழையப்படி வார டாஸ்குகள் கொடுக்கப்பட்டது.

அதிலும் கடந்த வாரம் நடந்த யூனியன் மற்றும் முதலாளி டாஸ்க் மிகப்பெரிய அளவில் வைரலாகியது. அருண் மற்றும் முத்துகுமரனுக்கு இடையே நடந்த பிரச்னை பெரிய அளவில் வெடித்தது. தொடர்ந்து அருணை வார இறுதியில் விஜய் சேதுபதி தாளித்து எடுத்தார்.

தொடர்ந்து, இரண்டு வாரமாக இரண்டு எலிமினேஷன் நடந்து வருகிறது. அந்தவகையில், நேற்று தர்ஷிகா மற்றும் சத்யா போட்டியில் இருந்து வெளியேறினர். இதில் சத்யா உள்ளே வந்ததில் இருந்து பெரிய அளவில் கண்டெண்ட் கொடுக்கவில்லை. இதனால் அவர் வெளியேற்றம் பலரை ஈர்த்தது.

ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷிகா தேவையே இல்லாமல் தன் போட்டியை கைவிட்டார். விஷால் உடனான காதல் சர்ச்சை அவருக்கு ரசிகர்களிடம் பெரிய ஏமாற்றமாக நிகழ்ந்தது. இருந்தும் இந்த வாரம் காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதில் சத்யாவிற்கு ஒருநாள் சம்பளமாக 20 ஆயிரம் பேசப்பட்டதாம். அந்த வகையில் 70 நாட்கள் உள்ளே இருந்தவருக்கு 14 லட்சம் மொத்தமாக சம்பளம் கிடைத்து இருக்கிறதாம். அதுபோல தர்ஷிகாவிற்கு 15 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்ட நிலையில் 10 லட்சமாக சம்பளம் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story