Bigg Boss Tamil8: ஆத்தாடி... அம்மணியை ஒருவழியா தள்ளிட்டாங்க போலயே!.. இவர்தான் எலிமினேஷனா?
Bigg Boss Tamil8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இந்த வாரம் எலிமினேட் ஆக இருக்கும் போட்டியாளர் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கியதிலிருந்து இந்த வாரம் தான் ரசிகர்களுக்கு நிறைய கண்டன்ட்டை கொடுத்தது என்பதுதான் உண்மை. போட்டியாளர்களை கதை பேச விட்டு ரசிகர்களை பார்க்க வைத்துவிடலாம் என பிக் பாஸ் டீம் நினைத்த விஷயம் எடுபடாமல் போனது.
இதனால் கடந்த இரண்டு வாரங்களாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து ரசிகர்களை கவர்ந்தது. அதையே பாலோ செய்து இந்த வாரமும் ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்க் நடத்தப்பட்டது.
இதில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல போட்டியாளர்கள் தங்களை மறந்து அடித்துக் கொண்டதும், சண்டையிட்டுக் கொண்டதும் விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. இதனால் இந்த வாரம் ரசிகர்களுக்கு நிறைய கன்டென்டுகளும் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வார இறுதி எபிசோட் ஆன இன்று விஜய் சேதுபதிக்கு கேட்கப்பட நிறைய கேள்விகள் இருக்கிறது. இதனால் இந்த வார இறுதி எபிசோடுகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் சின்னத்திரை நடிகை தர்ஷிகாவை வெளியேற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விறுவிறுப்பாக விளையாடி வந்த தர்ஷிகா கடந்த சில வாரங்களாகவே விஜே விஷாலுடன் காதல் செய்து கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கன்டென்ட்டை ரசிகர்கள் ரசிப்பார்கள் என அவர்கள் நினைத்து வருவது தான் ஆச்சரியம்.
ஒவ்வொரு சீசனிலும் இப்படி ஒரு காதல் ஜோடி உருவாகும். ஆனால் மூன்றாவது சீசனில் கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற யாருக்கும் கிடைக்கவில்லை. அப்படி தொடங்கிய அனைவருமே விமர்சிக்கப்பட்ட கதை எல்லாருக்குமே தெரியும். இதனால் கிரிஞ்சை செஞ்சிக்கிட்டு இருக்கும் இவர்களில் தர்ஷிகா வெளியேறுவது ரசிகர்களுக்கு செம குஷியாக இருக்கும் என்பதுதான் உண்மை.