Biggboss Tamil: ஜாக்குலின் செய்த சகுனி வேலை… இவருக்கா Nomination பாஸ்?

by Akhilan |
பிக் பாஸ் தமிழ்
X

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வார டாஸ்க் முடிந்திருக்கும் நிலையில் நாமினேஷன் ப்ரீ பாஸ் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 8 இந்த வாரம் கன்வேயர் பெல்ட் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளரான ஜெஃப்ரி தள்ளி விட்டதில் கீழே விழுந்து ரானவிற்கு கையில் அடிப்பட்டது. தொடர்ச்சியாக அவரை நம்பாமல் போட்டியாளர்கள் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: காளியின் தரமான சம்பவம்!.. கம்பேக் கொடுத்த நடிப்பு அரக்கன்.. வீர தீர சூரன் டீசர் எப்படி இருக்கு?..

ராணவிற்கு அடிபட்டதால் போட்டியாளர்கள் கவனமாக ஆட முற்பட்டார்கள். ஆனால் நேரம் செல்ல செல்ல போட்டிக்குள் வன்முறை அதிகமாகியது. முத்துவை பிடித்து இழுத்து சௌந்தர்யா தள்ளியதும், பவித்ரா அடித்ததும் அவர் மேலே மஞ்சரி மற்றும் ஜாக்குலின் ஏறியதும் என பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவ்வளவு பெரிய கலவரம் நடந்த நிலையில் அன்சிதாவை லாக் போட நினைத்த ராயனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கொஞ்சமும் அசராதவர் ராயனை தூக்கி அமுக்கி லாக் போட்டார் அன்ஷிதா. இத்தனை பரபரப்புகளுக்கு இடையே டாஸ்க் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது.

பலத்த போட்டிக்கு இடையே மஞ்சள் அணியை சேர்ந்த ரஞ்சித், ஜாக்குலின் மற்றும் ராயன் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதனால் இந்த மூவரில் நாமினேஷன் பிரீ பாஸ் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் ஜாக்லின் ராயனை தேர்வு செய்கிறார்.

இதில் உடன்பாடு இல்லாத ரஞ்சித் ஜாக்லினிடம் கோபமாக பேச, மூத்த கலைஞர் என்ற மரியாதை இல்லாமல் உங்களுக்கு பிரசன்ஸ் ஆப் மைண்ட் இல்லை என பேசுகிறார். ஆனால் உண்மையில் இந்த போட்டியில் பெண்கள் அணி தான் மிகச்சிறந்த விளையாடி இருந்தனர்.

இதனால் ராயனுக்கு இந்த பாஸ் சென்றிருப்பது நியாயம் இல்லை என தற்போது கண்டன குரல்கள் வலுத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த வாரமும் ஹாட்ரிக் எலிமினேஷனாக டபுள் வேட்டை இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Next Story