Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் டிக்கெட் டூ பினாலே வின்னர் இவரா? எல்லா கணக்கும் பொய் ஆச்சே!

by Akhilan |
Biggboss Tamil
X

Biggboss Tamil

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றியாளராக யாருமே எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் தட்டி சென்று இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதியை நெருங்கி வருகிறது. இதில் போட்டியாளர்களில் இறுதி வாரத்திற்கு செல்லும் முதல் போட்டியாளரை தேர்வு செய்யும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் தொடங்கி நடந்து வருகிறது. முதல் போட்டியிலிருந்து வெற்றி ஒருவர் வசம் இல்லாமல் மாறி மாறி போட்டியாளர்கள் வெற்றி பெற்று வந்தனர்.

இருந்தும் இந்த டாஸ்களில் சில ஒரு சாராருக்கு ஆதரவாக சென்றதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். அந்த வகையில் விஷால் மற்றும் முத்துவிற்கு நிறைய இடங்களில் ஆதரவாகவே பிக் பாஸ் டீம் இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்தும் வந்தனர்.

இருந்தும் அவர்களைத் தாண்டி யாருமே கணிக்க முடியாமல் கடந்த சில போட்டிகள் ஆகவே ராயன் முன்னிலை வகித்து வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று நடந்த கடைசி டாஸ்கில் வெற்றி பெற்று டிக்கெட்டை ராயன் தட்டி சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதன் மூலம் இறுதி வாரத்திற்கு முதல் போட்டியாளராக தேர்வாகி இருக்கிறார். ஆனால் அவருக்கு ஏற்கனவே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அடுத்த வாரம் நாமினேஷனிலும் தப்பித்து விடுவதால் இவருக்கு இறுதி வாரத்தில் பெரிய அளவு ஆதரவு இருக்காது என்றே கூறப்படுகிறது.

இதனால் பிக் பாஸ் டாப் ஐந்தில் கடைசி வாரம் நடந்தால் ராயனுக்கு ஐந்தாவது இடம் கிடைக்க தான் அதிக அளவில் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை முத்துக்குமரன் பிடித்திருக்கிறார். அவர் இதில் தோல்வியை தழுவினாலும் ரசிகர்களுக்கு தற்போது இது மகிழ்ச்சியான விஷயமாக மாறி இருக்கிறது.

ஏனெனில் அடுத்த வாரம் நாமினேஷனில் முத்து இல்லாமல் போனால் அது அவருடைய ஓட்டு வங்கியை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் கடைசி வாரத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதற்கு இந்த டிக்கெட்டை தவற விடுவது நல்லது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story