Biggboss Tamil: ஹப்பாடா ஒருவழியா மனசு வந்துச்சே… வெளியான சூப்பர் அப்டேட்… இனிமே ஜாலிதான்!..

by Akhilan |
Biggboss Tamil: ஹப்பாடா ஒருவழியா மனசு வந்துச்சே… வெளியான சூப்பர் அப்டேட்… இனிமே ஜாலிதான்!..
X

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் வரும் வாரம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் செமையாக டல்லடித்து கொண்டு இருந்தது. இந்தமுறை நிறைய புதுமைகளை இறக்கியும் எதுவும் வேலைக்காகவே இல்லை. தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கும் ஆரம்ப வாரங்களில் கொடுத்த வரவேற்பும் இல்லாமல் போனது.

இது மட்டுமல்லாமல் போட்டியாளர்கள் எப்போதும் போல குழுக்களாக பிரிந்து கொண்டு ஒருவரை குறித்து இன்னொருவர் பேசிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நிகழ்ச்சி பரபரப்பாக சென்றால் தானே டிஆர்பியும் அதிகரிக்கும்.

இதனால் தான் கடந்த இரண்டு வாரங்களாக வார டாஸ்குகள் வைக்கப்பட்டு வருகிறது. இதையும் விளையாடாமல் குறை சொல்லி சண்டையிட்டு கொண்டிருந்த ஜாக்லின் மீது ரசிகர்கள் கொலை வெறியாகினர். தொடர்ந்து போட்டியில் நிதானம் காட்டிய பவித்ராவிற்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இதனால் தற்போது ரசிகர்களுக்கு நிகழ்ச்சியை பார்க்க ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதை சரியாக பிடித்திருக்கும் பிக் பாஸ் குழு வரும் வாரத்தில் வேலையால் மற்றும் பாஸ் என்ற டாஸ்கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்த வாரத்தில் இருந்து பிக்பாஸின் ஆட்டத்திலேயே மிகப்பெரிய மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் நிகழ்ச்சியை அதிக ஆர்வம் காட்டி பார்க்கத் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இன்றைய நிகழ்ச்சியில் சாச்சனா மற்றும் ஆர் ஜே ஆனந்தி எலிமினேட் ஆகியிருக்கும் நிலையில் வரும் வாரங்களில் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 60 நாட்களை கடந்து விட்டதால் மேலும் ஆட்டத்தை விறுவிறுப்பாக வித்தியாசமான டாஸ்குகள் வரும் எனவும் கூறப்படுகிறது.

Next Story