Biggboss Tamil: காதலிக்காக தர லோக்கலாக இறங்கிய விஷ்ணு விஜய்… இதெல்லாம் நல்லாவா இருக்கு?
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 8ன் இறுதி வாரம் நெருங்கி விட்ட நிலையில், தன்னுடைய காதலியை வெற்றி பெற வைக்க சின்னத்திரை நடிகர் செய்திருக்கும் செயல் தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கிய போது இல்லாத பரபரப்பு முடியும் நேரத்தில் உருவாகி இருக்கிறது. விஜய் சேதுபதி முதல்முறையாக விஜய் டிவிக்கு தொகுப்பாளராக உள்ளே வருகிறார் என்றதும் ரசிகர்கள் பெரியதாக எதிர்பார்த்தனர்.
ஆனால் போட்டியாளர்கள் தேர்விலே ரசிகர்கள் வெறுப்படைந்தனர். சீரியல் நடிகர்களை மொத்தமாக இறக்கி ஆட்டத்தின் போக்கையே குழைத்ததாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். இருந்தும் பிக்பாஸுக்காக இருந்த கூட்டம் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வந்தது.
இதில் தற்போது தொடர்ச்சியாக பல வாரங்கள் டபுள் எலிமேஷன்கள் வரிசையாக நடந்தது. அதிலும் கடைசியாக தீபக் மற்றும் அருண் பிரசாத் எலிமினேஷனானது. ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. விளையாடாமல் இன்னமும் வீட்டிற்குள் சிலர் இருக்க கொஞ்சமாவது கண்டெண்ட் கொடுத்தவர்களை ஏன் வெளியேற்றினீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.
இதுமட்டுமில்லாமல், இந்த முறை உள்ளே வந்த பழைய போட்டியாளர்களும் நிறைய தேவையில்லாத விஷயத்தை பேசி ரசிகர்களும் மேலும் கோபம் அடைய செய்தது தான் உண்மை. இத்தகைய பிரச்னைகள் முடிந்து போட்டியாளர்களில் முத்து, ரயான், ஜாக்குலின், சவுந்தர்யா மற்றும் பவித்ரா உள்ளே இருக்கின்றனர்.
இதில் தற்போது வரை முத்து முன்னிலையில் இருக்கும் நிலையில் அதை முறியடிக்க சவுந்தர்யாவின் காதலரும், கடந்த சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான விஷ்ணு விஜய் களமிறங்கி இருக்கிறார். அதை நேர்வழியில் செய்தால் கூட பலரும் ஒப்புக்கொள்ளலாம்.
புகழில் இருக்கும் விஷ்ணு விஜய் தன்னுடைய இன்ஸ்டா குரூப்பில் எனக்கு அவசரமாக கால் பண்ணுங்க என போன் நம்பரை பதிவிட்டு இருக்கிறார். ஆனால் அந்த நம்பர் சவுந்தர்யாவுக்கான மிஸ்ட் கால் ஓட்டுக்கான எண் என்பதுதான் இங்கு விஷயமே.
குரூப்பில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருக்கின்றனர். விவரம் தெரிந்தவர்கள் ஓகே. தெரியாதவர்கள் இதை என்ன எண் என தெரியாமலே பரப்புவார்களே ஒரு போட்டியில் நேர்மையாக விளையாடாமல் இது என்ன பித்தலாட்டம் எனவும் தற்போது கேள்வி எழுந்துள்ளது.