Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் இந்த வாரம் நாமினேட்டான போட்டியாளர்கள்… அடுத்த பலியாடு ரெடியா?
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கும் போட்டியாளர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்க தொடங்கினார். அறிமுக விழாவில் அட்ராசிட்டியுடன் அவர் போட்டியாளர்களை கலாய்த்து தள்ளினாலும் அதற்கு அடுத்த நாட்களில் பெரிய அளவில் கன்டென்ட்டுகள் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அது மட்டுமல்லாமல் இந்த சீசன் போட்டியாளர்கள் தேர்வு கூட ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. விஜய் டிவியின் சீரியல் பிரபலங்கள் அதிகமாக கலந்து கொண்டிருப்பதால் ரசிகர்களிடம் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் அடக்கி வாசிப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் மீண்டும் அவர்கள் சின்னத்திரைக்கு வந்து சீரியல் நடிக்க வேண்டியது அவசியம். இதனால் நிகழ்ச்சி டிஆர்பி மிகப்பெரிய அளவில் அடிவாங்கியது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு குழு நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் டீமையும் மாற்றியது. இதை தொடர்ந்து தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக வார டாஸ்குகள் வைக்கப்பட்டது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடக்காத ஒரு டாஸ்க் நடத்தப்பட இருப்பதாகவும் தகடுகள் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும் எனவும் தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் பத்தாவது வாரமான இன்று நாமினேஷன் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுக்கு இதுவரை நாமினேட் செய்து அவர்களுக்கு பட்டப்பெயரையும் வழங்க வேண்டும். அப்படி போட்டியாளர்கள் காரியவாதி, விஷ பாட்டில், தந்திரக்காரர் என பல பட்டங்களை தங்களுடைய சக போட்டியாளர்களுக்கு கொடுத்து இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வாரம் ஜாக்லின், ராயன், சௌந்தர்யா, விஜே விஷால், அருண், பவித்ரா, தர்ஷிகா, சத்யா மற்றும் அன்சிதா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்த வாரங்களை வைத்து பார்க்கும் போது சத்தியா அல்லது தர்ஷிகா இந்த வாரம் எலிமினேட்டாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.