டிடிஎஃப் டைட்டிலில் கோல்மால் வேலை பார்த்த ரயான்… வெடித்த சர்ச்சை… பதில் சொல்வாரா விஜய் சேதுபதி?
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரயான் கடைசி போட்டியில் கோல்மால் செய்த விஷயத்தை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட்களாக எடுத்து போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றிகரமாக கடைசி வாரங்களையும் நெருங்கி வருகிறது. முதல் பைனலிஸ்ட்டை உறுதி செய்யும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வாரம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் முதலில் பின்தங்கிய ரயான் அடுத்தடுத்த போட்டிகளில் தன்னுடைய வலுவை காட்டினார்.
முத்துக்குமரன் அவருக்கு சரியாக ஈடு கொடுத்து விளையாடி வந்தார். மற்ற போட்டியாளர்கள் பெரிய அளவில் முயற்சி செய்தாலும் இந்த இரண்டு போட்டியாளர்களுக்குள் அவர்களால் செல்லவே முடியவில்லை. இதை தொடர்ந்து கடுமையாக போராடிய ரயான் டிக்கெட்டை வென்று இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இங்குதான் ஒரு பிரச்சனையை தற்போது தலை தூக்கி இருக்கிறது. கடைசி போட்டியில் ஒரு கண்ணாடி குடுவையை கம்பில் லேஜன்ஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை இரண்டு பக்கமும் கிராஸ் செய்து அதன் நீளத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.
ஆனால் இந்த நேரத்தில் குடுவையை யாரும் கையில் தொடக்கூடாது என்பது விதி என கூறப்படுகிறது. ஆனால் இந்த போட்டியில் ரயான் கண்ணாடி குடுவையை கைகளால் தொட்டு சரி செய்ததாக வீடியோ ஆதாரத்தை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால் இதை பிக் பாஸ் டீம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றுவிட்டது. இது விதிகளுக்கு எதிரானது என்றும் ரயான் இந்த போட்டியில் தோல்வி அடைந்திருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வாரம் விஜய் சேதுபதி குறும்படத்துடன் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ஒரு பக்கம் இரண்டு கோடுகளுக்கு அந்தப் பக்கம் தான் ரயான் அப்படி செய்ததால் விதிமீறலாக இருக்க வாய்ப்பு இருக்காது எனவும் பலர் கருத்துக்கள் வெளியானது. இருந்தும் மற்ற போட்டியாளர்கள் யாரும் குடுவையை கையில் தொடாமல் ரயான் மட்டும் தொட்டு இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டிக்கெட் டூ பினாலே டாஸ்கை வென்று இருக்கும் ரயானுக்கு அது கிடைக்குமா இல்லை தட்டி போகுமா என்பதை இந்த வார இறுதி நாளான சனிக்கிழமை இன்று விஜய் சேதுபதி தான் பதில் சொல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.