சிந்தாமணியை சிக்க வைத்து காசை வாங்கிய மீனா…. திரும்பி வந்த முத்து… செம ட்விஸ்ட்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுக்கான தொகுப்புகள்.
மீனா சிந்தாமணி மற்றும் மேனேஜரை மண்டப ஓனரிடம் சிக்க வைக்கிறார். அவர் சிந்தாமணியை திட்டிவிட்டு அந்த பணத்தை பிடுங்கி மீனாவிடம் கொடுத்து இனி இந்த மண்டபத்தில் வரும் எல்லா ஆர்டரும் உனக்கு தான் என சொல்லிவிட்டு செல்கிறார்.
மீனா சிந்தாமணியிடம் வந்து நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் என்னிடமே வந்துவிட்டது என்கிறார். உடனே சீதா இதே எங்க அக்காவா இருக்கதால தான் உன்னிடம் இருந்து பணத்தை மட்டும் வாங்குனா. எங்க மாமா இருந்தா இந்த மேனேஜர் ஹாஸ்பிட்டலில் இருக்கணும் என்கிறார்.
சீதா உன்னை அடிக்கணும் தோணுது எனக் கூற என்னை அடிச்சிடுவியா அடி பார்ப்போம் எனக் கூற மீனா வேண்டாம் இவங்களாம் நல்லவங்க இல்லை என மூக்கை உடைத்து இப்பையும் சொல்றேன். வாழுங்க வாழ விடுங்க எனக் கூறிவிட்டு செல்கிறார்.
மீனா பயந்துக்கொண்டே பைனான்சியரை பார்க்க போக அவர் அழைத்து உட்கார வைத்து பேசுகிறார். மன்னிச்சிடுங்க சார் எனக் கூற பரவாயில்லை ஆர்டர் முடிச்சோனையே பணம் வந்துடுமே என்ன ஆச்சு எனக் கேட்க என் தொழில் போட்டியில் சிந்தாமணி என்ற ஒருவர் பிரச்னை செய்ததாக கூறுகிறார்.
இதை கேட்ட பைனான்சியர் முக மாற அவரிடம் சிந்தாமணி செய்த எல்லா விஷயத்தை சொல்லுக்கொண்டு இருக்கிறார். கடைசியில் மண்டப விஷயத்தில் செய்ததையும் சொல்கிறார். இதை கேட்ட அவர் நீதான் தைரியமா காசை வாங்கிட்டீயே. இனிமே பெரிய ஆர்டர் எடு. எவ்வளவு காசு வேண்டும் என்றாலும் கேள் என்கிறார்.
மீனா கிளம்பி சென்று விட அவர் சிந்தாமணி புகைப்படம் முன் வந்து நிற்கிறார். மீனா மற்றும் சத்யா வெளியில் இருக்க ஒருவழியாக மீனா, முத்துவுக்கு கால் செய்து நடந்த விஷயங்களை கூறுகிறார். முத்து அந்த மேனேஜரை நாலு போட்ருக்கலாம் எனக் கூற அதான் சொல்லலை என்கிறார்.
முத்து மாலையுடன் வீட்டுக்கு வந்து மீனாவுக்கு போடுகிறார். அண்ணாமலை என்ன விஷயம் ஆச்சுடா எனக் கேட்க மீனா செஞ்ச விஷயத்தை முத்து சொல்கிறார். விஜயாவின் முகம் மாற அவரையும் சேர்த்து கலாய்த்து விடுகிறார் முத்து.