காய்ச்சலில் இருக்கும் கமல்ஹாசன்... இந்த வார பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார என சந்தேகம் இணையத்தில் பரவி வருகிறது.
ஒரே வீட்டில் 16க்கும் அதிகமான பிரபலங்கள் தங்க வைக்கப்பட்டு கேமராக்களால் கண்காணிக்கப்படுவார்கள். அது பல மொழிகளை தாண்டி 6 வருடத்துக்கும் முன்னர் தமிழிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் சீசன் தமிழ் பிக்பாஸுல் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் வெள்ளந்தியாக வலம் வந்த ஓவியாவை பலருக்கும் பிடித்து போனது. ஆனால் நிகழ்ச்சி பாதியிலேயே அவர் வெளியேறினார். அவர் காதலித்த ஆரவ் அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளரானார்.
தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கி இதில் பெரிதாக யாருக்கும் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் மும்தாஸ், யாஷிகா, ஐஸ்வர்யா, விஜி என பெண் கூட்டம் சூப்பர் அப்ளாஸை பெற்றனர். இதில் அடித்தடி இருந்தாலும் டாஸ்கில் மாஸ் காட்டினர். ரித்திகா இந்த சீசனின் வெற்றியாளராகினார்.
மூன்றாவது சீசனில் வி ஆர் தி பாய்ஸ் கூட்டணி தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தினர். அதில், கவின், சாண்டி மற்றும் லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இந்த டீமில் இருந்த முகின் ராவ் நிகழ்ச்சியில் பட்டத்தை தட்டி சென்றார்.
நான்காவது சீசனில் ஒற்றை ஹீரோவாக வலம் வந்தவர் ஆரி. சீசன் முதல் சில வாரங்களிலேயே இவர் தான் வெற்றியாளர் என சத்தியம் செய்யும் அளவுக்கு இவருக்கும் கூட்டம் அதிக ஆதரவை தந்தது. மூன்றாவது சீசனில் வொர்க்கான அந்த கூட்டணி விளையாட்டுகள் இந்த சீசனில் வேலைக்கு ஆகவில்லை. அன்பு கேங் என மோசமாக விமர்சிக்கப்பட்டனர்.
ஐந்தாவது சீசன் தான் பெரிதாக அனைவராலும் கவரப்பட்டது. அதிக காமெடி சீன்களை கொண்ட சீசனும் இது தான். இவர்கள் விளையாட்டால் தான் என்னவோ பெரிதாக டாஸ்க் கொடுக்கப்படாமல் இவர்களை பேசவிட்டே கண்டெண்ட் எடுத்தது பிக்பாஸ் டீம். இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜூ கோப்பையை தட்டினார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி 50 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் சில நாட்களிலே சண்டை சூடுபிடித்தது. முதல் வாரத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்ட அசீம் இரண்டே வாரத்தில் தனது பக்க ஆதரவை அதிகரித்தார். அவருக்கு போட்டியாக அரசியல் விமர்சகர் விக்ரமனுக்கும் அதிக ஆதரவு இருக்கிறது.
பொதுமக்களில் இருந்து வந்த சிவின் கணேசன் மற்றும் தனலட்சுமி இருவரும் சிறப்பாக விளையாடி வருவதால் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாமல் கமல் ரசிகர்கள் கேட்க விரும்பியதை வார இறுதியில் கேட்டு விடுகிறார். இதனால் வார இறுதி எபிசோட்டிற்கும் எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். அதனால் இந்த வாரயிறுதி எபிசோடுக்கு அவர் வருவாரா என சந்தேகம் கிளம்பி இருக்கிறது. சிலர் மொத்தமாக பிக்பாஸை அவர் விட்டு விலகலாம் எனவும் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.
கமல் வரவில்லை என்றால் அவருக்கு பதில் சிம்பு அல்லது ரம்யாகிருஷ்ணனிடம் பேசவும் பிக்பாஸ் குழு தயாராகி வருகிறது. ஆனால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார் எனவும் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.