Categories: latest news television watermelon star diwakar

Biggboss Tamil: கேமராமேன்களுக்கு நியாயம் கிடச்சாச்சு… அதிரடியாக வெளியேறி இருக்கும் போட்டியாளர்…

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்றைய வாரத்திற்கான வார இறுதி சூட்டிங் நடந்துவரும் நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேறி இருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியாக இருந்தது போட்டியாளர்கள் தேர்வுதான். பிரபலமான போட்டியாளர்கள் இருந்த நிகழ்ச்சிக்குள் சாதாரண இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர்கள் உள்ளே வந்தது பலருக்கு பிரியமானதாக இல்லை.

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அதையும் ஏற்றுக்கொண்டு போட்டியில் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக சண்டையிட்டுக் கொள்வதும் உள்ளே ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இதில் ஒரு படி மேலே போய் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்பட்ட டாக்டர் திவாகர் ஒவ்வொரு கேமராக்கள் முன்னும் நின்று ரீல்ஸ் செய்து வந்தார். அவரின் எண்ட்ரியே கடுப்பை கொடுத்த நிலையில் இது மேலும் வெறுப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

அவர் முதல் வாரமே வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்த போட்டியாளர்கள் அவர் மீது வெறுப்பை கொட்ட அது அவருக்கு பாசிட்டிவ் ஆக மாறியது. இதனால் தொடர்ந்து நிகழ்ச்சிக்குள் தக்கவைக்கப்பட்டு வந்தார். 

இந்நிலையில் கடந்த வாரம் அவர் நடந்து கொண்டது பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மேலும் அவர் சில தவறான வார்த்தைகளையும் நேஷனல் டெலிவிஷனில் தெரிவித்திருந்தது வைரலான நிலையில் தற்போது அவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டு வந்த கனி திரு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது. இரண்டு பேரும் எலிமினேஷனா அல்லது கடைசி நேரம் மாற்றமா என்பதை எபிசோடில் தான் பார்க்க முடியும். 

Published by
ராம் சுதன்