Categories: Entertainment News latest news television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை வென்ற விஜே அர்ச்சனாவின் காதலர் யாரென்பது தான் சின்னத்திரை வட்டாரங்களின் ஹாட் டாபிக்.

பிக்பாஸ் 7-வது சீசனில் வைல்டுகார்டு என்ட்ரியாக உள்ளே வந்து டைட்டில் வென்றவர் விஜே அர்ச்சனா.

Also Read

சொல்லப்போனால் 7-வது சற்றே விறுவிறுப்பாக செல்ல அர்ச்சனா, விஷ்ணு இருவருமே காரணம். இல்லை என்றால் சீசன் மொத்தமாக படுத்திருக்கும்.

உள்ளே நேருக்கு நேராக அர்ச்சனா போட்ட சண்டைகள் அவருக்கு வெளியில் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்தது. இதனால் தான் விஜய் டிவியும் டைட்டிலை தூக்கி தாராளமாக அவரின் கைகளில் கொடுத்தது.

வெளியில் வந்து ஆரம்பத்தில் வீட்டுக்கு உள்ளேயே இருந்த அர்ச்சனா தற்போது சுற்றுலா, தனியார் நிகழ்ச்சிகள் என பொது இடங்களில் தலைகாட்டி வருகிறார்.

இதற்கிடையில் நீண்டநாட்களாக அர்ச்சனாவின் காதலர் யாரென்பது குறித்து அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்தவகையில் பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அருண் பிரசாத் தான் அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்வதுபோல அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

முன்னதாக இருவரும் சேர்ந்து ஏற்காடு சுற்றுலா சென்றனர். அதில் அருணின் புகைப்படத்திற்கு லைக் போட்ட அர்ச்சனா பின்னர் அதனை அகற்றி விட்டார்.

சமீபத்தில் அருணின் புகைப்படம் ஒன்றிற்கு, ”என்னுடைய ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி”, என அர்ச்சனா கமெண்ட் செய்திருந்தார்.

இந்தநிலையில் லேட்டஸ்டாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அருண் பிரசாத் – அர்ச்சனா ஜோடியாக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்துள்ளனர்.

இதனால் விரைவில் இருவரும் தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
manju