Biggboss Tamil: அத்துமீறும் ஆதிரை… இந்த வார முதல் ரெட் கார்ட் கொடுக்கப்படுமா?

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடக்கும் ஜூஸ் டாஸ்கில் நேற்றைய எபிசோட்டில் நிறைய அத்துமீறல்கள் நடந்து இருப்பதால் ரெட் கார்ட் கொடுக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பரபரப்பான டாஸ்குகள் நடக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டியாளர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜூஸ் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதை நடுவர்களாக பார்வதி மற்றும் திவாகர் சோதனை செய்து அவர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள்.
இப்படி ஒரு டாஸ்க் அறிவிக்கப்பட இதில் பெரிய சுவாரசியம் இருக்காது என்று தான் முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் ஆரம்பம் முதலே சூடு பிடிக்க பிக் பாஸ் நடுவர்களான திவாகர் மற்றும் பார்வதிக்கு அதிக அளவிலான பவரை கொடுத்தார்.
இதனை தனக்கு சாதகமாக்கி கொண்ட பார்வதி போட்டியாளர்களிடம் தேவையில்லாமல் கேள்வி கேட்டு அவர்களின் கோபத்தைத் தூண்டி சண்டைக்கு வழி வகுத்தார். அது மட்டும் அல்லாமல் எஃப்ஜே மேடையில் அவரை வெறுப்பேற்றியது பிரச்சனையின் உச்சம்.
Gaana Vinoth silencing Aadhirai is so satisfying 😈#BiggBossTamil9 #BiggBossTamil pic.twitter.com/2W1CQBwWCM
— Deepu (@deepu_drops) October 22, 2025
Gaana Vinoth silencing Aadhirai is so satisfying 😈#BiggBossTamil9 #BiggBossTamil pic.twitter.com/2W1CQBwWCM
— Deepu (@deepu_drops) October 22, 2025
இதன் மூலம் இன்று நிறைய சண்டைகள் நடக்கும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை உள்ளே அமைதியாக இருந்த எல்லா போட்டியாளர்களும் தங்களுடைய முகத்திரையை கிழித்து நேற்று சண்டையை தொடங்கிவிட்டனர்.
கலை டேபிளை தள்ளி கத்தியதெல்லாம் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து பார்வதி திவாகரிடம் நடந்து கொண்டது தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தலவாணியை அடித்தது என பெரிய சம்பவம் காத்திருப்பதாகவே பலரும் நினைத்தனர்.
ஆனால் அத்தனை சண்டையிலும் பார்வதி அத்துமீறாமல் தன்னுடைய வார்த்தைகளால் மட்டுமே கோபத்தை காட்டி வந்தார். ஆனால் ஆதிரை தன்னுடைய சக போட்டியாளரான கானா வினோத்திடம் கோபத்தில் காலை தூக்கி காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆதிரை ஏற்கனவே எஃப்ஜேவிடம் காதல் காட்சி ஓட்டுவதும், சும்மா இருக்கும் அவரை கண்ட இடத்தில் தொட்டு தவறாக பேசி வருவதும் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த வாரம் ஆதிரை வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.