Biggboss Tamil: நான் சொல்லப் போவதை வச்சு பாரு சண்டை போடுவாங்க… எண்ட்ரிக்கு முன் அமித்!
Biggboss Tamil:தமிழ் சீசன் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கும் நிலையில் முக்கிய போட்டியாளராக கருதப்படும் அமித் பார்கவ் தன் வீட்டிற்குள் போனால் என்ன செய்யப் போகிறேன் என்பதை தன்னுடைய லைவில் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நான்கு வாரங்கள் முடிந்து விட்டது. வீட்டிற்குள் சென்ற எல்லா பிரபலங்களும் பெரிய அளவில் புகழ் இல்லாததால் ரசிகர்களால் அவர்களுடன் ஒன்ற முடியாமலே இருக்கிறது. இதற்கு விதிவிலக்காக அமைந்திருக்கிறது வைல்ட் கார்ட் எண்ட்ரி.
90ஸ் கிட்ஸின் பேவரிட் தொகுப்பாளரான பிரஜின் அவர் மனைவி சாண்ட்ராவுடன் ஒன்றாக உள்ளே செல்ல இருக்கிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுதான் முதல் முறை என்பதால் இவர்களுடைய எண்ட்ரியும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஒரு கட்டத்தில் தற்போதைய பிரஜினுக்கு டைட்டில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருமே ரசிகர்களிடம் பெரிய அளவு கூட்டத்தை வைத்திருக்கும் நிலையில் ஆரம்ப முதலே அடித்து ஆடவே செய்வார்கள் எனக் கருதப்படுகிறது.
இதில் இன்னொரு ஆச்சரிய எண்ட்ரி அமித் பார்கவ் தான். விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிக் பாஸ் வாய்சாக முதல் இரண்டு சீசன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை நடத்தியவர் உள்ளே வந்திருக்கும் நிலையில் இவருக்கு எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற திறமை இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் அமித் தன்னுடைய லைவ் மூலம் யாரிடம் எப்படி நடந்து கொள்ளப் போகிறேன் என்பதை ஓபன் ஆகவே சொல்லியிருக்கிறார். அந்த வகையில் போட்டியாளர் பார்வதியிடம் தான் சொல்லப்போவது, கண்டிப்பாக அவரை பாதிக்கும்.
இதனால் அவர் என்னிடம் சண்டை போட கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எல்லோரிடமும் எப்படி பேச வேண்டும் என்பதை தான் முடிவு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் அமித். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருக்கும் எல்லோரும் சண்டைக்கு வந்திருப்பது போல நடந்து கொண்டுள்ளனர்.
கண்டிப்பாக வைல்ட் கார்ட் உள்ளே சென்று அவர்களுடைய கண்ணோட்டத்தை சொல்லும்போது இன்னொரு பெரிய பிரளயம் வெடிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
