1. Home
  2. Bigg boss

Biggboss: திடீரென டிரெண்ட்டாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 பெண் போட்டியாளர்… விஷயம் இதானா?

nivashini
நிவாஷினி பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளே வந்தாலும் அவருக்கும் போட்டியாளர் அசல் கோளாறுக்கும் காதல் கிசுகிசு கிளம்பிய நிலையில் உடனே எலிமினேட் செய்யப்பட்டார்.

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்ட மாடல் நிவாஷினி தற்போது திடீரென டிரெண்ட்டிங்கில் சிக்கி இருக்கிறார். 

தமிழ் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களை கடந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் இயக்குனர் பிரவீன் காந்தியும்,  கடந்த வாரம் திருநங்கை அப்சராவும் வெளியேறி இருக்க இந்த வாரம் தற்போது பரபரப்பாகி வருகிறது. 

இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வரலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிலும் பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் ஜோடியாக போட்டியாளர்களாக உள்ளே இருக்க குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பிரபலமான நிவாஷினி கிருஷ்ணன் திடீரென இணையத்தில் வைரலாக பரவி வருகிறார். இது குறித்து ஆராய்ந்த போது, இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு புதிய அப்டேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி யாருடைய போஸ்டை நாம் நம்முடைய பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். அதற்கு ஒரே ஒரு ஷேர் ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்  சம்பந்தப்பட்ட பதிவு நம்முடைய பக்கத்திலும் காட்டப்பட்டு விடும். ஆனால் பலர் அவசரமாக ஸ்குரோல் செய்யும் போது அந்த பட்டன் கிளிக் செய்யப்படுகிறது. 

nivashiini

இதனால் பலருக்கு தங்கள் பக்கம் போய் பார்த்தால்தான் தவறுதலாக எதையும் கிளிக் செய்து வைத்திருக்கோமா என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரும், தற்போதைய துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் பக்கத்தில் நிவாஷினியின் படங்கள் பகிரப்பட்டுள்ளது. 

அதிலும் அவர் அல்ட்ரா மாடர்ன் போஸ்களில் இருக்க உடனே இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டுள்ளது. தற்போது ஒரே இரவில் நிவாஷினி செம டிரெண்ட்டிங்கில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிவாஷினி சிங்கப்பூரை சேர்ந்த மாடல் மற்றும் நடிகை. பிக்பாஸில் இவர் சொற்ப வாரங்களே இருந்தார். 

கட்டுரையாளர்கள்