1. Home
  2. Bigg boss

Biggboss Tamil9: துஷாருக்கு அந்த இடத்தில் கிஸ் கொடுத்த அரோரா… டேட்டிங் செய்யவா வந்தீங்க!

Aurora Sinclair
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சர்ச்சை பிரபலங்களை அழைப்பது வழக்கம்தான். ஆனாலும் இந்த முறை உள்ளே வந்திருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார், பலூன் அக்கா போன்ற பிரபலங்கள் சரியா என்றே கேள்விகளே தொடர்கிறது. 

Biggboss Tamil9: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 பரபரப்பாக நடந்து வரும் நிலையில் எந்த முறையும் இல்லாத வகையில் இந்த சீசனில் தொடர்ச்சியாக போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்து கொள்ளும் விஷயம் தொடர்ந்து வருகிறது.

ஹிந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு வரும்போது நிறைய விஷயங்களை தமிழ் ரசிகர்களுக்காக மாற்றி அமைத்திருந்தனர். மற்ற மொழிகளில் ஓப்பனாக சிகரெட் பிடிப்பதும், அரைகுறை ஆடையில் திரிவதும் சாதாரணமாக பார்க்கப்பட்டது.

ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகை பிடிப்பதற்கு என ஒரு அறை அமைக்கப்பட்டு அது பொதுவெளியில் காட்டப்படாமல் தனிமையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் போட்டியாளர்கள் அதில் கூட தங்களுடைய ரகசியங்களுக்கு பயன்படுத்த தொடங்கினர்.

அந்த வகையில் முதல் சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் அந்த அறையில் தான் முத்தம் கொடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நிறைய சச்சரவான விஷயங்கள் மறைவாகவே நடந்து கொண்டு வருகிறது.

ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசன் தொடங்கப்பட்ட போதே போட்டியாளர்கள் தேர்வு ரசிகர்களிடம் நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தனர். சமூக வலைதளத்தில் தவறாக பிரபலமாகி ரசிகர்களால் பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா சின்ஹிலர் உள்ளே வந்தார்.

முதல் வாரம் இவருடைய பேச்சு தெளிவாக இருந்தது. மற்ற போட்டியாளர்களை போல இல்லாமல் போட்டிக்காக நிறைய யோசித்தது போல தன்னை காட்டிக் கொண்டார். இதனால் முதல் வாரம் இவரை தவறாக எண்ணிவிட்டோமோ என கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதையும் எளிதில் நம்பி விட முடியாது என்பதற்கு தற்போது அரோரா முக்கிய உதாரணமாக மாறியிருக்கிறார். இதுவரை 18 பிளஸ் காட்சிகள் இடம் பெறாத தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரால் தற்போது அதீத காட்சிகள் இடம்பெற தொடங்கியிருக்கிறது.

தன்னுடைய சக போட்டியாளரான துஷாரிடம் எல்லை மீறி நடந்து கொள்வது போல பல வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது மட்டுமல்லாமல் நேற்றைய லைவ் நிகழ்ச்சியில் துஷார் இவரை அரவணைத்த போது கழுத்தில் முத்தம் கொடுத்ததும் அடிக்கடி அவருடன் உரசுவது போல நின்று கொண்டு இருப்பது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருகிறது. 

ஒவ்வொரு சீசனிலும் இது போன்ற காதல் ஜோடிகள் இணக்கமாக நடந்து கொள்வதும் அவர்களை அடுத்தடுத்த வாரங்களில் ரசிகர்கள் வெளியேற்றுவதும் தொடர்கதையாக மாறியிருக்கும் நிலையில் இந்த வாரம் நாமினேஷன் இருக்கும் அரோரா வெளியேறுவாரா எனக் கேள்வி எழுந்து வருகிறது.