Biggboss Tamil: நீங்க ரீல் விட்டது போதும், ரியலா இறக்குறோம்… பிக்பாஸ் தமிழில் முதல்முறையாக!

Biggboss Tamil: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக ஒரு வித்தியாசமான முயற்சியை களம் இறக்க இருக்கின்றனர். கண்டிப்பாக இது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த முறை நிகழ்ச்சிக்குள் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத பிரபலங்கள் மட்டுமே உள்ளே சென்று இருக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு ஆர்வம் குறையுமோ என முதலில் கூறப்பட்டது.
ஆனால் அதிகம் பிரபலம் இல்லாத போட்டியாளர்கள் மேலும் நிகழ்ச்சியை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இரண்டு வாரங்களை கடந்து நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. முதல் எலிமினேஷன் ஆக இயக்குனர் பிரவீன் காந்தியும், இரண்டாம் எலிமினேஷனாக அப்சராவும் வெளியேறி இருக்கின்றனர்.
இந்நிலையில் எப்போதும் நிகழ்ச்சிக்குள் பாதியில் வைல்ட் கார்ட்டாக உள்ளே இறக்குவார்கள். அந்த வகையில் இந்த முறை வைல்டு கார்ட் எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளர் பிரஜீன் மற்றும் சின்னத்திரை நடிகையும் அவர் மனைவியுமான சாண்ட்ரா ஒன்றாக உள்ளே வருகின்றனர்.
பொதுவாக இந்தி பிக்பாஸில் தான் ஒரே நேரத்தில் காதலர்களை ஒன்றாக களமிறக்குவார்கள். ஆனால் தமிழில் இதுவரை மனைவி, கணவன் ஒன்றாக வந்தது இல்லை. இதற்கு முன்னர் தமிழ் இரண்டாவது சீசனில் ஆர்.ஜே.பாலாஜி உள்ளே வந்தார்.
வைல்ட் கார்ட்டாக அவர் மனைவி நித்யா எண்ட்ரி கொடுத்தார். இருந்தும் அப்போது அவர்கள் பிரிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரே நேரத்தில் கணவன் மனைவியாக போகும் முதல் ஜோடி பிரஜீன் மற்றும் சாண்ட்ரா எனக் கூறப்படுகிறது.
20களில் தொகுப்பாளராக இருந்த பிரஜீனுக்கு அப்போதே ரசிகர்கள் எக்கசக்கம். அதை தொடர்ந்து காதலிக்க நேரமில்லை என்ற தொடரில் நடித்தார். இன்னமும் அந்த சீரியலின் இண்ட்ரோ பாடல் ரசிகர்களிடம் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிக்பாஸ் சீசன் 9ல் யாருக்கும் பெரும்பான்மை வராத பட்சத்தில் பிரஜீன் உள்ளே வந்தால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். ஏழாவது சீசனை போல பிரஜீனும் வைல்ட் கார்ட்டாக வந்து டைட்டிலை தட்டலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது. பிக்பாஸ் சீசனில் இனி ரியல் லவ்வை பார்க்கலாம்!