1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: எல்லாத்துக்குமே இப்படி பண்ணா எப்படி? கண்டென்ட் பெயரில் கடுப்பேத்தும் பார்வதி!

parvathy
பார்வதி ஏற்கனவே சண்டைகளால் நிகழ்ச்சிக்கு நிறைய கண்டென்ட் கொடுத்து வரும் நிலையில் சமீபமாக கம்ரூதினுடன் காதல் டிராக்கையும் ஓட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஜூஸ் தயாரிக்கும் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் நடுவராக இருக்கும் பார்வதி தொடங்கி இருக்கும் சண்டைதான் இன்றைய மூன்று புரோமோக்களிலும் காட்டப்பட்டிருக்கிறது.

தொகுப்பாளராக இருந்தவர் விஜே பார்வதி. இதற்கு முன் இவர் ஜீ தொலைக்காட்சியில் நடந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதிலும் பாதியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வதிக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆரம்பத்தில் இருந்த தெரியாத முகங்களுக்கிடையே பார்வதி மட்டுமே ஓரளவு தெரிந்த முகங்களுள் ஒருவராக இருந்தார். முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்களிடையே தேவையே இல்லாமல் பேசி சாதாரண விஷயத்திற்கு சண்டையை தொடங்கிவிட்டு கண்டென்ட் கொடுத்து வந்தார் பார்வதி. அதிலும் முதல் வாரம் கூட்ட முடியாது என அடம் பிடித்து கத்தினார்.

இதை அடுத்து சென்ற வாரம் டீலக்ஸ் டீமில் சென்றதால் தன்னுடைய பலத்தை நிரூபிக்க சமையல் மேடையில் அமர்ந்து பேச மற்ற போட்டியாளர்கள் சமைக்க முடியாது என தர்ணா செய்தனர். இதைத்தொடர்ந்து பார்வதி தான் செய்த செயலுக்காக போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தும் தொடர்ந்து அவர் கண்டெண்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் வேலை செய்ய முடியாது என்பதையே சொல்லி வந்தார். அதிலும் இந்த வாரம் நடக்கும் டாஸ்கில் நடுவராக பார்வதி மற்றும் திவாகர் இருப்பதால் கண்டிப்பாக கண்டென்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது நாளான இன்று எல்லா புரோமோக்களும் அதிரடி சண்டைக்காட்சிகளால் நிரம்பி இருக்கிறது. அதிலும் இரண்டாவது புரோமோவில் திவாகரை சகட்டுமேனிக்கு பார்வதி திட்டுவதும், மூன்றாவது புரோமோவில் அவரை திட்டிக்கொண்டே அழுவதுமாக இருக்கிறார்.

கோபத்தில் தலையணையை தூக்கி போட்டு அவர் அடிப்பதை பார்க்கும்போது திவாகரை அடிக்க முடியாமல் இதை செய்வதாக ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். மேலும் நிகழ்ச்சிக்கு தானாக அமையும் கண்டென்டுகளை வரவேற்பு பெறும். ஆனால் பார்வதி தானாக ஒரு சண்டையை உருவாக்கி கத்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்று போட்டி தொடங்கியதில் இருந்தே எல்லோரிடமும் தன்னுடைய பவரை காட்டுகிறேன் என்ற பெயரில் வம்பு இழுப்பது போல பேசுவதை தற்போது இருந்தே பார்க்க முடிகிறது. இதை வைத்தே பார்வதி இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.