Biggboss Tamil9: காட்றதுல அரோராவை தோக்கடித்த பார்வதி… கொஞ்சம் அடங்கி இருக்கலாமே!

Biggboss Tamil9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பிரபல பாடகி சுசித்ரா நிகழ்ச்சி குறித்து கொடுத்திருக்கும் கமெண்ட் தற்போது இணையத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 9 தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டது. எல்லா முறையும் போட்டியாளர்கள் ஓரளவு பிரபலங்களாக மட்டுமே உள்ளே வருவார்கள். அதிலும் விஜய் டிவியை சேர்ந்த சீரியல் பிரபலங்கள் நிகழ்ச்சிக்குள் நிறைய வருவார்கள்.
ஆனால் இந்த முறை அப்படியல்லாமல் தங்களுடைய பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் ஒதுக்கி மக்களுக்கு அதிகம் அறியப்படாத முகங்களை உள்ளே அழைத்து வந்திருக்கின்றனர். அதிலும் நிறைய முகங்கள் சர்ச்சைகளை பேசி பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பதில் வீடியோ போட்டு பிரபலமான வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், இளைஞர்களிடம் பிரபலமான அரோரா, விஜே பார்வதி என பலரும் உள்ளே வந்து இருக்கின்றனர். போன சீசன்களைப் போல இல்லாமல் தற்போது வரை யாருக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் கூட்டம் அமையவில்லை.
ஆனால் நிகழ்ச்சிக்குள் முதல் நாளிலிருந்து சண்டை நின்ற பாடு இல்லை. ஆனால் இவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கே ஒரு கட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எந்த சீசனிலும் இல்லாமல் இந்த சீசனில் அதிகளவிலான வரம்பு மீறிய காட்சிகளும் இடம்பெற தொடங்கி இருக்கிறது.
அரோரா மற்றும் துஷார், எஃப்ஜே மற்றும் ஆதிரை என பல இடங்களில் கட்டி அணைத்துக் கொள்ளும் காட்சிகளும் 24 மணி நேர லைவில் இடம்பெற துவங்கி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் போட்டியில் அதிக அளவு ஆர்வம் காட்டும் விஜே பார்வதி முதல் வாரத்தில் தன்னுடைய டிரஸ்ஸில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே அதீத மாடர்ன் உடையில் அவர் வலம் வந்த காட்சியை பார்க்கும் போது பலருக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் சர்ச்சை பாடகியான விஜேயை சுசித்ரா இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறும் போது, பிசியோதெரபி செய்கிறேன் என்ற பெயரில் இதுவரைக்கும் வழிச்சுக்கிட்டு மசாஜ் கொடுக்கிறது. கேமரா பார்வதியின் பாதத்திலிருந்து மேல வரைக்கும் காட்டிடுச்சு.
காட்டுறதுல அரோராவை பார்வதி தோற்கடிச்சுட்டா. பார்வதியோட பார்ட்ஸ் நமக்கு அத்துபடி. காலவிருச்சு வச்சு தான் உட்காருவாங்க. சரி இருந்தாலும் அதை பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். பார்க்க சகிக்கவே இல்லை என அதிரடியாக தெரிவித்திருப்பது வைரலாகி வருகிறது.